உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
வளைந்து வளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
(செந்தாழம் பூவில்...)
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் குள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
(செந்தாழம் பூவில்...)
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளெ வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி
(செந்தாழம் பூவில்...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
4 comments:
மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் வரும் " அதிகாலை நேரமே; சுகமான ராகமே" என்ற பாடலை அப்லோட் செய்ய முடியுமா? இனிய பாடல்களை தருவதற்கு மி்க்க நன்றி.
Dear Sri,
Alagana Pulli Mani music director(s) Manjo-Kyan. Not IR.
regards
Thanjavurkaran
தவறுக்கு வருந்துகிறேன் நண்பரே!
தவறை சுட்டிக்காட்டியதர்க்காக நன்றி. அந்த பாடல் தகவல்கள் நேற்றே மாற்றப்பட்டு விட்டது. இந்த வலைப்பூ இளையராஜாவுக்காக மட்டும் இல்லை, இது அழியாத பாடல்களுக்காகவும் தான். என்ன செய்ய? அழகான, அழியாத பாடல்களை இளையராஜா தானே அதிகம் தந்திருக்கிறார் அதனால் தான் இந்த வலைப்பூ முழுவதும் அவர் பாடல்கள் தான் இருப்பது போல தோன்றும்.
கருத்துக்கு கோடி நன்றி
@ Sasikala
உங்கள் விருப்பம் நாளை வெளியிடப்படும் சகோதரி. வாழ்த்துக்கு நன்றி. எப்படியோ இந்த பாடலை நான் தவறவிட்டு விட்டேன்.
Post a Comment