Monday, September 17, 2007

சாலையோரம் சோலையொன்று...

படம்: பயணங்கள் முடிவதில்லை.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி.



சாலையோரம் சோலையொன்று ஆடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து

(சாலையோரம் சோலையொன்று...)

பாவை இவள் பார்த்து விட்டால் பாலைவனம் பூத்தொடுக்கும்
கண்ணிமைகள் தான் அசைந்தால் நந்தவனக்காற்றடிக்கும்
நீங்கள் எனைப் பார்த்தால் குளிரெடுக்கும்
மனதுக்குள் ஏனோ மழையடிக்கும்
பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்
மொட்டுக் கதவை பட்டு வண்டுகள் தட்டுகின்றதே இப்போது

(சாலையோரம் சோலையொன்று...)

கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அழித்ததனால் கன்னி மனம் தான் துடிக்க
கடலுக்குக் கூட ஈரம் இல்லையோ
நியாயங்களைக் கேட்க யாருமில்லையோ
சேர்த்து வைத்த தாகம் கண்ணா இன்று தீரும்
பேசும் கிள்ளையே தேவ முல்லையே நேரம் இல்லையே இப்போது

(சாலையோரம் சோலையொன்று...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: