Friday, August 31, 2007

ஏரிக்கரை பூங்காத்தே...

படம்: தூறல் நின்னு போச்சு.
உயிர்: இளையராஜா.
உடல்: சிதம்பரநாதன்.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.




ஏரிக்கரை பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி என்ன தேடி வர தூது சொல்லு

பாத மலர் நோகுமுன்னு நடக்கும் பாதை வழி பூ விறிச்சேன் மயிலே
ஓடம் போல் ஆடுதே மனசு கூடித்தான் போனதே வயசு
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது

(ஏரிக்கரை பூங்காத்தே...)

ஓடிச்செல்லும் வான் மேகம் நிலவை மூடிக்கொள்ளப்பாக்குதடி அடியே
சாமத்தில் பாடுறேன் தனியா ராகத்தில் சேரணும் துணையா
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராஜாங்கம் வரும் வரை ரோஜாவே கத்திரு

(ஏரிக்கரை பூங்காத்தே...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

பூபாள‌ம் இசைக்கும்...

படம்: தூறல் நின்னு போச்சு.
உயிர்: இளையராஜா.
உடல்: முத்துலிங்கம்.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்,உமா ரமணன்.




பூபாள‌ம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

(பூபாள‌ம் இசைக்கும்...)

மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே நாணமே பெண்ணின் சீதனமே
மேகமழை நீராட தோகை மயில் வாராதோ
திதிக்கும் இதழ் முத்தங்கள் அது நனநனநனந‌ன‌னா

(பூபாள‌ம் இசைக்கும்...)

பூவை எந்தன் தேவை உந்தன் சேவை அல்லவா
மன்மதன் கோயில் தோரணமே மார்கழி திங்கள் பூமுகமே
நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம்
அம்மம்மா அந்த சொர்கத்தில் சுகம் நனநனநனந‌ன‌னா

(பூபாள‌ம் இசைக்கும்...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

India 24 Hours

இது இளையராஜாவின் மூன்றாவது ஆல்பம். ஆனால் மிகவும் பேசப்படாத ஒன்று. இதோ அது உங்களுக்காக இங்கே..




இசையில் நனைவோம்...
-‍ஸ்ரீ.

Wednesday, August 29, 2007

மெளனமே பார்வையாய்...

படம்: அன்பே சிவம்.
உயிர்: வித்யாசாகர்.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், சந்த‌ரயி.



மெளனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்
நாணமே வண்ணமாய் பூசிக்கொண்டோம்
புன்னகைப் புத்தகம் வாசிக்கின்றோம்
என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்
இரு உள்ளம் பல வண்ணங்களை அள்ளும்
சில எண்ணங்களை சொல்லும் துள்ளும் கண்ணம்மா

(மெளனமே பார்வையாய்...)

ஜனனம் தந்தாய் சலனம் தந்தாய் காதல் மொழியில்
மரணம் கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் உந்தன் பிரிவில்

(என்றும் வாழ்க வாழ்க இந்த நேரங்கள்
சுகம் சேர்க சேர்க வரும் காலங்கள்
மலர் சூழ்க சூழ்க இவன் பாதைகள்
இன்னும் வெள்க வெள்க இளம் ஆசைகள்)

ஒரு சேதி அடி நீ என்பதென் பாதி
இனி நான் என்பதுன் மீதி தேதி சொல்லம்மா

(மெளனமே பார்வையாய்...)

இலக்கணம் உடைத்ததும் கவிதை வரும்
இரவினை துடைத்ததும் கனவு வரும்
ஸ்வரங்களை திறந்ததும் இசை மலரும்
மொழிதோன்றாத காலத்தில் நுழைந்தால் என்ன?
விழிஜாடைகள் பேசியே நடந்தால் என்ன?


(என்றும் வாழ்க வாழ்க இந்த நேரங்கள்
சுகம் சேர்க சேர்க வரும் காலங்கள்
மலர் சூழ்க சூழ்க இவன் பாதைகள்
இன்னும் வெள்க வெள்க இளம் ஆசைகள்)

ஒரு மெல்லினத்தை வல்லினமும் கைசேர‌
ஒரு காப்பியத்தை தோழி உந்தன் கண்ணாலே பேசு

(மெளனமே பார்வையாய்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

அந்தி மழை...

படம்: ராஜ பார்வை.
உயிர்: இளையராஜா.
உடல்: வைரமுத்து.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.



அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

(அந்தி மழை...)

தேனில் வண்டு மூழ்கும் போது பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்றாய்
தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்றாய்
தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையிலே
எத்தனை இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளும் சுமையடி இள மயிலே

(அந்தி மழை...)

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?
தண்ணீல் நிற்கும்போதே வேர்க்கின்றது
நெஞ்சுபொறு கொஞ்சமிரு தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்கலிள் சந்தனமாய் எனை பூசுகிறேன்

(அந்தி மழை...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Friday, August 24, 2007

பூ மலர்ந்திட...

படம்: டிக் டிக் டிக்.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ், ஜென்சி.



பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்
விழிகளால் இரவினை விடியவிடு
நான் நடமிட உருகிய திருமகனே
I love you I love you I love you
I love you I love you I love you
விழிகளில் நிலவுகள் தெரிகிறதோ
I love you I love you I love you
I love you I love you I love you


ஏன் இந்த கோபம்?
யார் தந்த சாபம்?
நீ மேடை மேகம்
ஏன் மின்னல் வேகம்?
கெடுத்தானே சிரிக்கின்ற பாவி
தடுத்தானே இது என்ன நீதி?
உனக்காக் எரிகின்ற ஜோதி
இவன் இன்று உறங்காத ஜாதி
படுக்கையில் பாம்பு நெளியுது
தலையனை நூறு கிழியுது
நீ அணிகிற ஆடையில்
ஒரு நூலென தினம் நான் இருந்திட
சநிதபமபதநி

தேனாறு ஒன்று நீராடும் இங்கே
பூமாலை ஒன்று தோல் சேரும் இங்கே
இலை ஆடை உடுத்தாத பூக்கள்
செடி மீது சிரிக்கின்ற நாட்கள்
இலை ஆடை உடுத்தாத பூக்கள்
செடி மீது சிரிக்கின்ற நாட்கள்
சுடச்சுட ஆசை வருகுது
இவள் மனம் தீயில் நனையுது
போதையில் ஒரு தாமரை மலர்
தான் உடைந்தது தேன் நடந்தது
சநிதபமபதநி
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
I love you I love you I love you
I love you I love you I love you
விழிகளில் தெரிவது விடிகதையோ
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே.


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

வண்ணம் கொண்ட...

படம்: சிகரம்.
உயிர்: எஸ் பி பாலசுப்ரமணியம்.
உடல்: வைரமுத்து.
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்.



வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை

(வண்ணம் கொண்ட...)

பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை சுவாசிக்க ஆசையில்லை
கண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை
தள்ளித்தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள யாருமில்லை

(வண்ணம் கொண்ட...)

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி
கண்ணிரண்டில் பார்த்திருப்பேன் கால்கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன்வந்து சேரும்வரை தேகம்போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்


(வண்ணம் கொண்ட...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Thursday, August 23, 2007

Nothing but wind



1988 புல்லாங்குழல் வித்வான் ஹரிபிரசாத் சவ்ரேசியாவுடன் இணைந்து வெளியிட்ட ஒன்று. இந்த தொகுப்புகளை பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டியிருப்பதால் இதை பற்றிய தகவல்கள் பின்னர் வெளியிடப்படும்.


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

How to name it?

1986 தியாகராஜருக்கும், பாஷுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது.
இது இளையராஜாவின் முதல் ஆல்பம்.



இதன் சில தகவல்கள் இங்கே.

1. How to name it?

இந்த பீஸ் சிம்ஃபனி மாதிரியே 3 பாகங்களை கொண்டது. ஆனால் இது ராகங்களை அடிப்படையாக கொண்டவை வெச்டன் ஸ்கேல்களை அல்ல. இது சிம்மென்ரமத்யமம் என்பதில் தொடங்கி செண்முகப்பிரியா ராகம் சென்று பின் பட்டீப் மாறி மீண்டும் செண்முகப்பிரியா சேர்ந்து கடைசியாக சிம்மென்ரமத்யமம் ராகத்தில் முடிகின்றது. அதனால் தான் "How to name it?" என பெயர் வைத்தாரோ?

2. Mad Mad mood

இது மயமலவா கெளலாவை அடிப்படையாக கொண்டது. இது வெச்டன் ஸ்கேல்களுடன் 3 மெலடிகளை கொண்டது. 2 வயலின்கள் 1 பாஸ் (Bass). இது இந்தியன் ராகத்தை வெஸ்டன் கிளாசிக்குடன் இணைக்கும் ஒரு பீஸ்.

3. Its fixed

மயமலவா கெளலாவை முன்னமே கொடுத்த இளையராஜா தியாகராஜரின் கீர்த்தனைகளை இதில் இசையோடு கைகுளுக்க வைத்திருக்கிறார்.

4. You cant be free

இந்திய மற்றும் வெஸ்டன் இசையில் உள்ள ஜாஸை இணைத்தது இந்த பீஸ். இது பந்துவரளி ராகத்தால் ஆனது. இந்திய ஜாஸ் முதலில் முடிவுக்கு வந்த உடன் வெஸ்டன் ஜாஸ் பந்துவரளி ராகத்தை கையாள்கிறது. முடிவில் இரண்டும் ஒன்றாக கலக்கிறது.

5. Chamber welcomes Thiyagaraja

சாம்பர் ஆர்கெஸ்ரா போல் இல்லாமல் வெறும் 3 அல்லது 4 வாத்தியங்களை கொண்டது. இந்த பீஸில் கர்நாட்டிக் வயலின் (தியாகராஜர் நினைவாக),மிருதங்கம் இரண்டும் சாம்பர் வாத்தியங்களோடு இணைகிறது. கல்யாணி ராகத்தை அடிப்படையாக கொண்டது.

6. I met Bach

இது பாஸ்ஸின் "Bourre in E-minor" இசையை தழுவியது. பாஸ் இசை மைனர் ஸ்கேலில் இருந்து மேஜருக்கும் பின் மைனருக்கும் வருமாறு அமைத்திருப்பார். இளையராஜா பாஸ்ஸின் இசையை பின்னணியில் சிந்தசைசர் மற்றும் ஒரு பேஸ் கிட்டாரால் உலவ விட்டு அவர் ஒரு மூன்றாவது பகுதியை இதில் இணைத்தார். இதை அவர் பாஸ் 300 ஆண்டுகளுக்கு முன் அமைத்திருந்தாலும் வெஸ்டன் மியூசிக்கிளும் ராகங்கள் இருப்பதை உணர்த்தவே அமைத்தது போலவே தோன்றுகிறது ஆனால் அதற்கு வெஸ்டனில் பெயர்கள் அப்போது வைக்கப்படவில்லை.

7. ... and we had a talk

இது போன பீஸின் தொடர்ச்சி போலவே தோன்றும். இதுவும் பாஸ்ஸின் "Prelude in E major" வுடன் இளையராஜா கொஞ்சம் வயலினையும் அவருடைய குரலையும் சில இடங்களில் சேர்த்து அழகூட்டியிருக்கிறார். இது ஹம்சவர்தினியில் ஒரு ஆலாபனையில் தொடங்கி வேறு சில ராகங்களையும் (உதாரணத்துக்கு சாருகேசி) தொட்டுவருகிறது. இது அழகான கலவை தான் பாஸுக்காக இளையராஜா போட்டதா இல்லை இளையராஜாவுக்காக பாஸ் போட்டதா என கேள்வி கேட்க வைக்கும் ஒன்று.

8. Do anything

இது D minor புள்ளாங்குழலில் தொடங்கி பியானோவின் துணையோடு பின்னர் ஷெனாயுடன் கலந்த ஒன்று. எனக்கு மிகவும் பிடித்த ஒரு பீஸ் இது.


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

நான் பாடும்...

படம்: இதயக்கோவில்.
உயிர்: இளையராஜா.
உடல்: வைரமுத்து.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.




நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்

(நான் பாடும்...)

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா வந்து போவ‌துண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இன்று பாடுது
கூடு இன்று குயிலைத் தானே தேடுது

(நான் பாடும்...)

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே யோகம் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது காம்பு இங்கு வாடுது
காலம் என்னைக் கேள்வி கேட்குது
கேள்வி இன்று கேலியாகிப் போனது

(நான் பாடும்...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

பூங்காத்து திரும்புமா...

படம்: முதல் மரியாதை.
உயிர்: இளையராஜா.
உடல்: வைரமுத்து.
குரல்: மலேசியா வாசுதேவன், ஜானகி.



பூங்காற்று திரும்புமா?
என் பாட்ட விரும்புமா?
பாராட்ட‌ மடியில் வெச்சுத் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா?

(பூங்காற்று திரும்புமா...)

ராசாவே வருத்தமா?
ஆகாயம் சுருங்குமா?
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா?

என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல

ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாத சோகத்த சொன்னேனடி

சொக ரக சோகந்தானே

யாரது போரது?

குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

(பூங்காற்று திரும்புமா...)

உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறணும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்

மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே

எசப் பாட்டு படிச்சேன் நானே

பூங்குயில் யாரது?

கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க

அடி நீதானா அந்தக் குயில்?
யார் வீட்டு சொந்தக் குயில்?
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே

நாந்தானே அந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகம் தான் மறந்ததா?


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

இதழில் கதை எழுதும்...

படம்: உன்னால் முடியும் தம்பி.
உயிர்: இளையராஜா.
உடல்: புலமைப்பித்தன்.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா.



இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இருகரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது

(இதழில் கதை எழுதும்...)

காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ரகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே
ஏன் இனும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுத

நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே
காலம் என்றைக்குக் கனிந்திடுமோ?
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ?
மாலை மலர் மாலை இடும் வேளை தனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்

(இதழில் கதை எழுதும்...)

தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ

நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதைத் தீர்க்குமொரு
ஜீவ நதி அருகினில் இருக்குது

(இதழில் கதை எழுதும்...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

நீ பார்த்த பார்வைக்கு...

படம்: ஹே ராம்!
உயிர்: இளையராஜா.
உடல்: ஜீவன் ஆனந்த் தாஸ்.
குரல்: ஹரிஹரன், ஆஷா போச்லே.




நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி!
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி!
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி!

நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான் தான்
இனிமேலும் வரம் கேட்கத்தேவை இல்லை
இது போல் வேரெங்கும் சொர்கம் இல்லை
உயிரே வா...

நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன?
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே!
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே!

உயிரே வா...

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி!
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி!
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி!
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி!
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி!
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி!

உயிரே வா...


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

நிலவு தூங்கும் நேரம்...

படம்: குங்குமச்சிமிழ்.
உயிர்: இளையராஜா.
உடல்: கங்கை அமரன்.
குரல்: எஸ்.பி.பி,எஸ்.ஜானகி.




நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை

(நிலவு தூங்கும் நேரம்...)

நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே!
வானம்,காற்று,பூமி இவை சாட்சியானதே!
நான் உனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்
நான் இனி நீ.. நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே!

(நிலவு தூங்கும் நேரம்...)

கீதை போல காதல் மிக புனிதமானது!
கோதை நெஞ்சில் ஆடும் இந்த சிலுவை போன்றது!
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம்?.. ஏன் தயக்கம்?
கண்ணா வா இங்கே!

(நிலவு தூங்கும் நேரம்...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

மெளனமான நேரம்...

படம்: சலங்கை ஒலி.
உயிர்: இளையராஜா.
உடல்: வைரமுத்து.
குரல்: எஸ்.பி.பி, எஸ்.ஜானகி.



மெளனமான நேரம்
இளமனதில் என்ன பாரம்?
மனதில் ஓசைகள்
இதழில் மெளனங்கள்
ஏனென்று கேளுங்கள்.

(மெளனமான நேரம்...)

இளமைச் சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ?
புலம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ?
குளிக்கும் ஒர் கிளி
கொதிக்கும் நீர்த்துளி
ஊதலான மார்கழி
நீளமான ராத்திரி
நீயும் வந்து ஆதரி.

(மெளனமான நேரம்...)

இவளின் மனது இன்னும் இரவின் கீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
ஆதனால் நேசமோ
கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ?

(மெளனமான நேரம்...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

ஏதேதோ எண்ணம்...

படம்: புன்னகை மன்னன்.
உயிர்: இளையராஜா.
உடல்: வைரமுத்து.
குரல்: சித்ரா.



ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
பண் பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே.

(ஏதேதோ...)

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனை பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன்
பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்ன கூறு
பூவும் நானும் வேறு.

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வா
கை நீட்டினேன் என்னை கரை சேர்க்க வா
நீயே அணைக்கவா
தீயை அணைக்கவா
நீ பார்க்கும் போது பனி ஆகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும்
இந்த அன்பு போது.

(ஏதேதோ...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.