Thursday, August 23, 2007

How to name it?

1986 தியாகராஜருக்கும், பாஷுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது.
இது இளையராஜாவின் முதல் ஆல்பம்.



இதன் சில தகவல்கள் இங்கே.

1. How to name it?

இந்த பீஸ் சிம்ஃபனி மாதிரியே 3 பாகங்களை கொண்டது. ஆனால் இது ராகங்களை அடிப்படையாக கொண்டவை வெச்டன் ஸ்கேல்களை அல்ல. இது சிம்மென்ரமத்யமம் என்பதில் தொடங்கி செண்முகப்பிரியா ராகம் சென்று பின் பட்டீப் மாறி மீண்டும் செண்முகப்பிரியா சேர்ந்து கடைசியாக சிம்மென்ரமத்யமம் ராகத்தில் முடிகின்றது. அதனால் தான் "How to name it?" என பெயர் வைத்தாரோ?

2. Mad Mad mood

இது மயமலவா கெளலாவை அடிப்படையாக கொண்டது. இது வெச்டன் ஸ்கேல்களுடன் 3 மெலடிகளை கொண்டது. 2 வயலின்கள் 1 பாஸ் (Bass). இது இந்தியன் ராகத்தை வெஸ்டன் கிளாசிக்குடன் இணைக்கும் ஒரு பீஸ்.

3. Its fixed

மயமலவா கெளலாவை முன்னமே கொடுத்த இளையராஜா தியாகராஜரின் கீர்த்தனைகளை இதில் இசையோடு கைகுளுக்க வைத்திருக்கிறார்.

4. You cant be free

இந்திய மற்றும் வெஸ்டன் இசையில் உள்ள ஜாஸை இணைத்தது இந்த பீஸ். இது பந்துவரளி ராகத்தால் ஆனது. இந்திய ஜாஸ் முதலில் முடிவுக்கு வந்த உடன் வெஸ்டன் ஜாஸ் பந்துவரளி ராகத்தை கையாள்கிறது. முடிவில் இரண்டும் ஒன்றாக கலக்கிறது.

5. Chamber welcomes Thiyagaraja

சாம்பர் ஆர்கெஸ்ரா போல் இல்லாமல் வெறும் 3 அல்லது 4 வாத்தியங்களை கொண்டது. இந்த பீஸில் கர்நாட்டிக் வயலின் (தியாகராஜர் நினைவாக),மிருதங்கம் இரண்டும் சாம்பர் வாத்தியங்களோடு இணைகிறது. கல்யாணி ராகத்தை அடிப்படையாக கொண்டது.

6. I met Bach

இது பாஸ்ஸின் "Bourre in E-minor" இசையை தழுவியது. பாஸ் இசை மைனர் ஸ்கேலில் இருந்து மேஜருக்கும் பின் மைனருக்கும் வருமாறு அமைத்திருப்பார். இளையராஜா பாஸ்ஸின் இசையை பின்னணியில் சிந்தசைசர் மற்றும் ஒரு பேஸ் கிட்டாரால் உலவ விட்டு அவர் ஒரு மூன்றாவது பகுதியை இதில் இணைத்தார். இதை அவர் பாஸ் 300 ஆண்டுகளுக்கு முன் அமைத்திருந்தாலும் வெஸ்டன் மியூசிக்கிளும் ராகங்கள் இருப்பதை உணர்த்தவே அமைத்தது போலவே தோன்றுகிறது ஆனால் அதற்கு வெஸ்டனில் பெயர்கள் அப்போது வைக்கப்படவில்லை.

7. ... and we had a talk

இது போன பீஸின் தொடர்ச்சி போலவே தோன்றும். இதுவும் பாஸ்ஸின் "Prelude in E major" வுடன் இளையராஜா கொஞ்சம் வயலினையும் அவருடைய குரலையும் சில இடங்களில் சேர்த்து அழகூட்டியிருக்கிறார். இது ஹம்சவர்தினியில் ஒரு ஆலாபனையில் தொடங்கி வேறு சில ராகங்களையும் (உதாரணத்துக்கு சாருகேசி) தொட்டுவருகிறது. இது அழகான கலவை தான் பாஸுக்காக இளையராஜா போட்டதா இல்லை இளையராஜாவுக்காக பாஸ் போட்டதா என கேள்வி கேட்க வைக்கும் ஒன்று.

8. Do anything

இது D minor புள்ளாங்குழலில் தொடங்கி பியானோவின் துணையோடு பின்னர் ஷெனாயுடன் கலந்த ஒன்று. எனக்கு மிகவும் பிடித்த ஒரு பீஸ் இது.


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: