Thursday, September 27, 2007

உறவென்னும் புதிய வானில்...

படம் : நெஞ்சத்தை கிள்ளாதே.
உயிர் : இளையராஜா.
உடல் : கங்கை அமரன்.
குரல் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.



உறவென்னும் புதிய வானில் பறந்ததே இதய மோகம்
ஓடும் அலை என மனம் போகும்
கனவிலும் நினைவிலும் புது சுகம்

(உறவென்னும் புதிய வானில்...)

பார்வை ஒவ்வொன்றும் கூறும் பொன் காவியம்
பாவை என்கின்ற கோலம் பெண் ஓவியம்
மாலை வரும் போதிலே நாளும் உந்தன் தோளிலே
கனவில் ஆடும் நினைவு யாவும் இனிய பாவம்

(உறவென்னும் புதிய வானில்...)

நெஞ்சில் உள்ளூர ஓடும் என் ஆசைகள்
நேரம் இல்லாமல் நாளும் உன் பூஜைகள்
எந்தன் மனம் எங்கிலும் இன்பம் அது சங்கமம்
இணைந்த கோலம் இனிய கோலம் இளமைக்காலம்

(உறவென்னும் புதிய வானில்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Wednesday, September 26, 2007

அடி ஆத்தாடி... இளமனசொன்னு...

படம் : கடலோரக் கவிதைகள்
உயிர் : இளையராஜா.
உடல் : வைரமுத்து
குரல் : இளையராஜா, ஜானகி.




அடி ஆத்தாடி... இளமனசொன்னு
றெக்கை கட்டிப்பறக்குது சரிதானா..
அடி அம்மாடி.. ஒரு அலை வந்து
மனசில அடிக்குது அதுதானா..

உயிரோடு உறவாட..
ஒருகோடி ஆனந்தம்..
இவன் மேகம் ஆக யாரோ காரணம்..

(அடி ஆத்தாடி... இளமனசொன்று)

மேல போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ..
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டிப் பாடாதோ..

இப்படி நான் ஆனதில்லை..
புத்திமாறிப் போனதில்லை..
முன்ன பின்ன நேர்ந்ததில்லை
மூக்கு நுனி வேர்த்ததில்லை..

கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்டை கண்டாயோ..
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ..
இசைகேட்டாயோ..............

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்..
உண்மை சொல்லு பெண்ணே -என்னை என்ன செய்ய உத்தேசம்..

வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்
வந்து வந்து போவதென்ன..
கட்டுமரம் பூப்பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன..

கட்டுத்தறி காளை நானே கன்னுக்குட்டி ஆனேனே..
தொட்டுத் தொட்டு தென்றல் பேச தூக்கம் கெட்டுப்போனேனே..
சொல் பொன்மானே...

(அடி ஆத்தாடி இளமனசொன்று)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

காதல் ஓவியம்...

படம் : அலைகள் ஓய்வதில்லை.
உயிர் : இளையராஜா.
உடல் : பஞ்சு அருணாச்சலம்.
குரல் : இளையராஜா, ஜென்சி.




காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்

(காதல் ஓவியம்...)

தேடினேன் ஓ ஓ என் ஜீவனே
தென்றலிலே மிதந்துவரும் தேன்மலரே
நீயும் நாயகன் காதல் பாடகன்
அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம்

(காதல் ஓவியம்...)

தாங்குமோ? என் தேகமே
மன்மதனின் மலர்கணைகள் தோள்களிலே
மோகம் தீரவே வா என் அருகிலே
உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம்

(காதல் ஓவியம்...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Tuesday, September 25, 2007

ஒரு ஜீவன் அழைத்தது...

படம் : கீதாஞ்சலி.
உயிர் : இளையராஜா
குரல் : இளையராஜா, உமா ரமணன்.



ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம் இங்கு கண்ணீரும் விழவேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

(ஒரு ஜீவன் அழைத்தது...)

முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய் முள்ளை உள்ளே வைத்தாய்
என்னைக்கேளாமல் கன்னம் வைத்தாய் நெஞ்சில் கன்னம் வைத்தாய்
நீ இல்லை என்றால் என் வானில் என்றும் பகல் என்ற ஒன்றே கிடையாது
அன்பே நம் வாழ்வில் பிறிவென்பதில்லை ஆகாயம் ரெண்டாய் உடையாது
இன்று காதல் பிறந்தநாள் என் வாழ்வில் சிறந்த நாள்
மணமாலை சூடும் நாள் பார்க்கவே

(ஒரு ஜீவன் அழைத்தது...)

உன்னை நான் கண்ட நேரம் நெஞ்சில் மின்னல் உண்டானது
என்னை நீ கண்ட நேரம் எந்தன் நெஞ்சம் துண்டானது
காணாத அன்பை நான் இங்கு கண்டேன் காயங்கள் எல்லாம் பூவாக
காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல கண்டேனே உன்னை தாயாக
மழை மேகம் பொழியுமா நிழல் தந்து விலகுமா
இனி மேலும் என்ன சந்தேகமா?

(ஒரு ஜீவன் அழைத்தது...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

தாலாட்டு மாறிப்போனதேன்...

படம் : உன்னை நான் சந்தித்தேன்
உயிர் : இளையராஜா
குரல் : இளையராஜா.



தாலாட்டு மாறிப்போனதேன் என் கண்ணில் தூக்கம் போனதேன்
பெண் பூவே வந்தாடு என் தோளில் கண்மூடு என் சொந்தம் நீ

(தாலாட்டு மாறிப்போனதேன்...)

உன் சோகம் என் ராகம் ஏன் என்று கேட்கிறாய்
பெண் மானே செந்தேனே யார் என்று பார்க்கிறாய்
உன் அன்னை நான் தானே என் பிள்ளை நீ தானே இது போதுமே

(தாலாட்டு மாறிப்போனதேன்...)

கண்ணீரில் சந்தோஷம் நான் இன்று காண்கிறேன்
தாயாக இல்லாமல் தாலாட்டு பாடினேன்
என் வாழ்வே உன்னோடு என் தோளில் கண்மூடு சுகமாயிரு

(தாலாட்டு மாறிப்போனதேன்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

துள்ளி எழுந்தது காற்று...

படம் : கீதாஞ்சலி.
உயிர் : இளையராஜா
குரல் : இளையராஜா, உமா ரமணன்.



துள்ளி எழுந்தது காற்று சின்ன குயிலிசை கேட்டு
சந்த வரிகளை போட்டு சொல்லி கொடுத்த்து காற்று
உறவோடு தான் அதை பாடணும்
இரவோடு தான் அரங்கேறணும்

(துள்ளி எழுந்தது காற்று...)

உயிரே ஒரு வானம்பாடி உனக்காக கூவுது
அழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது
மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோகுது
மாலை முதல் காலை வரை சொன்னாலென்ன காதல் கதை
காமன் கணை எனை வதைக்குதே

(துள்ளி எழுந்தது காற்று...)

அடியே ஒரு தூக்கம் போட்டு வெகு நாள் தான் ஆனது
கிளியே பசும் பாலும் தேனும் வெறுப்பாகி போனது
நிலவே பகல் நேரம் போலே நெருப்பாக காயுது
நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாற்றியே
வா வா கண்ணே இதோ அழைக்குறேன்

(துள்ளி எழுந்தது காற்று...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Monday, September 24, 2007

பூமாலையே தோள் சேரவா...

படம் : பகல் நிலவு
உயிர் : இளையராஜா
குரல் : இளையராஜா, ஜானகி



பூமாலையே தோள் சேரவா
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா ( ஏங்கும் இரு )
இளைய மனது ( இளைய மனது )
இணையும் பொழுது ( இணையும் பொழுது )
இளைய மனது ( தீம்தன தீம்தன )
இணையும் பொழுது ( தீம்தன தீம்தன )
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )


நான் உனை நினைக்காத நாளில்லையே
தேனினை தீண்டாத பூ இல்லையே (தனனா)
நான் உனை நினைக்காத நாளில்லையே (என்னை உனக்கென்று கொடுத்தேன்)
தேனினை தீண்டாத பூவில்லையே (ஏங்கும் இளங்காதல் மயில்நான்)
தேன்துளி பூவாயில் (லலலா) பூவிழி மான்சாயல் (லலலா)
தேன்துளி பூவாயில் (லலலா) பூவிழி மான்சாயல் (லலலா)
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வந்து தழுவும் ஜென்மம் முழுதும்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வந்து தழுவும் ஜென்மம் முழுதும்
நாளும் பிரியாமல் காலம் தெரியாமல் கலையெலாம் பழகுவோம் அனுதினம்

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா

(லலல லலலா)
கோடையில் வாடாத கோயில் புறா (லலலா)
காமனைக் காணாமல் காணும் கனா (லலலா)
கோடையில் வாடாத கோயில் புறா (ராவில் தூங்காது ஏங்க)
காமனைக் காணாமல் காணும் கனா (நாளும் மனம்போகும் எங்கோ)
விழிகளும் மூடாது (லலலா) விடிந்திடக் கூடாது (லலலா)
விழிகளும் மூடாது (லலலா) விடிந்திடக் கூடாது
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
காற்று சுதி மீட்ட காலம் நதி கூட்ட கனவுகள் எதிர் வரும் அனுபவம்


பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா (ஏங்கும் இரு)
இளைய மனது ( இளைய மனது )
இணையும் பொழுது ( இணையும் பொழுது )
இளைய மனது ( தீம்தன தீம்தன )
இணையும் பொழுது ( தீம்தன தீம்தன )
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

கொடியிலே மல்லிகப்பூ...

படம்: கடலோரக்கவிதைகள்.
உயிர்: இளையராஜா.
உடல்: வைரமுத்து.
குரல்: இளையராஜா, ஜானகி.



கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா துடிக்கிறேன் நானே

மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்லே சொல்லிப்புட்டா வம்பு இல்லே
சொல்லத்தானே தெம்பு இல்லே இன்ப துன்பம் யாரால்

பறக்கும் திசையேது இந்தப் பறவ அறியாது
உறவும் தெரியாது உலகம் புரியாது
பாறையிலே பூவளர்ந்து பார்த்தவங்க யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணால

(கொடியிலே மல்லிகப்பூ...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

விழியில் விழுந்து...

படம்: அலைகள் ஓய்வதில்லை.
உயிர்: இளையராஜா.
உடல்: வைரமுத்து.
குரல்: இளையராஜா, சசிரேகா.



விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு

(விழியில் விழுந்து...)

உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜென்னலும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டல் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டல் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

(விழியில் விழுந்து...)

கல்வி கற்க காலை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் தரையில் தூக்கிப் போட்டான்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
எனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Friday, September 21, 2007

மன்றம் வந்த தென்றலுக்கு...

படம்: மெளனராகம்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.



மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடதெனும் வானம் உண்டோ சொல்

(மன்றம் வந்த தென்றலுக்கு...)

தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்

(மன்றம் வந்த தென்றலுக்கு...)

மேடையைப் போலே வாழ்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஒடையைப் போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

தேனே தென்பாண்டி மீனே...

படம்: உதயகீதம்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்.



தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத் தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை
ஆரீராரோ

(தேனே தென்பாண்டி மீனே...)

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாத வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலம்
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

(தேனே தென்பாண்டி மீனே...)

பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே
பால் மனதைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தல் வாசம் விட்டு போகுமா
ராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை

(தேனே தென்பாண்டி மீனே...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

மணி ஓசை கேட்டு எழுந்து...

சகோதரி ஸ்ரீவித்யா அவர்களுக்காக...

படம்: பயணங்கள் முடிவதில்லை.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.



மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத் தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது
அந்தக் கோவிலின் மணி வாசலை இன்று மூடுதல் முறையோ

(மணி ஓசை கேட்டு எழுந்து...)

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்...ஆஆஆஆஅ
கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகதோ
ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ
ராதை மனம் ஏங்கலாமோ கன்ணன் முகம் வாடலாமோ
வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ

(மணி ஓசை கேட்டு எழுந்து...)

பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது
பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது
பாடும் புது வீணை இங்கே ராகம் அதில் மாறும் அங்கே
தாளம் மாறுமோ ராகம் சேருமோ

(மணி ஓசை கேட்டு எழுந்து...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Thursday, September 20, 2007

இதயம் ஒரு கோவில்...

படம்: இதயக்கோயில்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி.




இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்

(இதயம் ஒரு)

ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல
எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது

(இதயம் ஒரு கோவில்...)

காமம் தேடும் உலகிலே ஜீவன் என்னும் கீதத்தால்
ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது

(இதயம் ஒரு கோவில்...)

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாயே
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே

(இதயம் ஒரு கோவில்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

பாடு நிலாவே...

படம்: உதயகீதம்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி.



பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன்

(பாடு நிலாவே...)

நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமலே போகுமோ
கைதான பொதும் கை சேரவேண்டும்
உன்னொடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறுமே

பாடு நிலவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் கேட்கிறேன் பாமாலையை நான் கோர்க்கிறேன்

(பாடு நிலாவே...)

ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு சேரும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேர வேண்டும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே

(பாடு நிலாவே...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

வா வெண்ணிலா...

படம்: மெல்லத்திறந்தது கதவு.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி.



வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்

ஒரு முறையேனும் திருமுகம் காணும்
வரம் தரம் வேண்டும் எனக்கது போதும்

எனைச்சேர எனைச்சேர எதிர்பார்த்தேன்
முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்

(வா வெண்ணிலா...)

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போதும்
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்

இடையினிலாடும் உடையென நானும்
இணை பிரியாமல் துணை வர வேண்டும்..

உனக்காக உனக்காக பனிக் காற்றை
தினம் தூது போக வேண்டினேன்

(வா வெண்ணிலா...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Wednesday, September 19, 2007

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்...

படம்: உதயகீதம்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.




சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே

(சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்...)

போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூ மனமே...

(சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்...)

உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராக பவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூ மணமே...

(சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

கூட்டத்திலே கோவில் புறா...

படம்: இதயக்கோயில்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.




கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கயிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப் பார்க்கயிலே ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது

(கூட்டத்திலே கோவில் புறா...)

நான் பாடும் ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ தந்தது
என் பாடல் உன் நெஞ்சில் யாழ் மீட்டுது
என் ஆசை உன்னைத் தாலாட்டுது
பூங்குயிலே...பூங்குயிலே உந்தன் பாதையிலே ஆனந்தத் தேன் பொழிவேன்
பாவை உன்னை எண்ணிக்கொண்டு பாடுகின்றேன் பாடலொன்று
நெஞ்சுக்குள்ளே நீயும் வாந்து வாழுகின்றாய் கோவில்கொண்டு
ஆனந்த மேடையில் பூவிழி ஜாடையில்
ஆயிரம் காவிய நாடகமாடிட எண்ணுது என் மனமே

(கூட்டத்திலே கோவில் புறா...)

நீதானே நானாடும் பிருந்தாவனம்
நின்றாடும் தேகம் ரோஜாவனம்
ஆகாயம் காணாத பொன் மேகமே
என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே
கன்னிப்பெண்ணே...கன்னிப்பெண்ணே நீயும் இல்லையென்றால் கானமழை வருமோ
தாமரைப்பூந்தாள் எடுத்து நீ நடக்கும் வேளையிலே
தாளத்துடன் சந்தங்களைக் கற்றுக்கொண்டேன் பொன்மயிலே
என்னிசை தீபத்தை ஏற்றிய பொன்மயில்
வான்மழை போல் இந்தப் பாவலன் நெஞ்சினில் வாழிய வாழியவே

(கூட்டத்திலே கோவில் புறா...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

மலையோரம் வீசும் காத்து...

படம்: பாடு நிலாவே.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.





மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா
மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா
யாராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாயும் தந்த பாட்டுதானம்மா

(மலையோரம் வீசும் காத்து...)

வான் பறந்த தேன் சிட்டு நான் புடிக்க வாராதா
கள்ளிருக்கும் ரோசாப்பூ கை கலக்க கூடாதா
ராப்போது ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா
உள் மூச்சு வாங்கினேனே முள் மீது தூங்கினேனே
இல்லாத பாரமெல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே
நிலாவ நாளும் தேடும் வானம் நான்

(மலையோரம் வீசும் காத்து...)

குத்தாலத்து தேன் அருவி சித்தாட தான் கட்டாதா
சித்தாடைய கட்டி ஏழை கையில் வந்து கிட்டாதா
ஆத்தோரம் நாணல் பூங்காத்தோடு ஆட
ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீயிருந்து என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான்

(மலையோரம் வீசும் காத்து...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Tuesday, September 18, 2007

ராஜ ராஜ சோழன் நான்...

படம்: இரட்டை வால் குருவி.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.



ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே

(ராஜ ராஜ சோழன் நான்...)

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி

(ராஜ ராஜ சோழன் நான்...)

கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தாணை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தல்லாடுமே பொன் மேனி கேளாய் ராணி

(ராஜ ராஜ சோழன் நான்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

தென்றல் வந்து என்னைத்தொடும்...

படம்: தென்றலே என்னைத்தொடு.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ், ஜானகி.




தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய் விடு இரவே பாய் கொடு
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு

(தென்றல் வந்து என்னைத்தொடும்...)

தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும்
தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில் சாயும் போது

(தென்றல் வந்து என்னைத்தொடும்...)

தேகம் எங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில் வீழ்ந்ததேனோ கண்ணே
மலர்ந்த கொடியோ மயங்கிக்கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
சாரம் ஊறும் நேரம்

(தென்றல் வந்து என்னைத்தொடும்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

பாட வந்ததோ...

படம்: இளமைக் காலங்கள்.
உயிர்: இளையராஜா.
உடல்: வாலி.
குரல்: கே ஜே யேசுதாஸ், சுசீலா.



பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ

(பாட வந்ததோ...)

ராஜமாலை தோள்சேரும் நாணமென்னும் தேனூரும்
கண்ணில் குளிர்காலம் நெஞ்சில் வெயில்காலம்
அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி
பண்பாடி கண்மூடி உனது மடியில் உறங்கும் ஒரு கிளி

(பாட வந்ததோ...)

மூடிவைத்த பூந்தோப்பு காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது இமைகள் இறங்காது
தேனே...கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூரும் நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்

பூவே...பூவைக்கு ஏனிந்த வாசம்

(பாட வந்ததோ...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Monday, September 17, 2007

தேடும் கண் பார்வை தவிக்க...

படம்: மெல்லத்திறந்தது கதவு.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி.



தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...

தேடும் கண் பார்வை தவிக்க...துடிக்க...

காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்...மலரே...
உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம்... இணைவோம்...
இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா...

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ...

தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க...

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

சாலையோரம் சோலையொன்று...

படம்: பயணங்கள் முடிவதில்லை.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி.



சாலையோரம் சோலையொன்று ஆடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து

(சாலையோரம் சோலையொன்று...)

பாவை இவள் பார்த்து விட்டால் பாலைவனம் பூத்தொடுக்கும்
கண்ணிமைகள் தான் அசைந்தால் நந்தவனக்காற்றடிக்கும்
நீங்கள் எனைப் பார்த்தால் குளிரெடுக்கும்
மனதுக்குள் ஏனோ மழையடிக்கும்
பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்
மொட்டுக் கதவை பட்டு வண்டுகள் தட்டுகின்றதே இப்போது

(சாலையோரம் சோலையொன்று...)

கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அழித்ததனால் கன்னி மனம் தான் துடிக்க
கடலுக்குக் கூட ஈரம் இல்லையோ
நியாயங்களைக் கேட்க யாருமில்லையோ
சேர்த்து வைத்த தாகம் கண்ணா இன்று தீரும்
பேசும் கிள்ளையே தேவ முல்லையே நேரம் இல்லையே இப்போது

(சாலையோரம் சோலையொன்று...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

பருவமே புதிய பாடல் பாடு...

படம்: நெஞ்சத்தைக் கிள்ளாதே.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி.



பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்

பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா
சிரிக்கிறாள் ஹோ ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹோ ஹோ துடிக்கிறாள் ராணி
தீபங்கள் போலாடும் பார்வை சேரும்

(பருவமே புதிய பாடல் பாடு...)

தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ
அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ நடிக்கிறான் தோழன்
அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ தவிக்கிறாள் தோழி
காலங்கள் பொன்னாக மாறும் நேரம்

(பருவமே புதிய பாடல் பாடு...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Friday, September 14, 2007

தனிமையிலே ஒரு ராகம்...

சகோதரி சசிகலா அவர்களுக்காக...

படம்: சட்டம் ஒரு இருட்டறை.
உயிர்: சங்கர் கணேஷ்.
குரல்: சுரேந்தர், ஜானகி.



தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளைமையின் நினைவுகள் பறந்தது

ஹோ நெஞ்சமே உன்னிடம் இன்று தான் மாற்றமே
கல்லான நெஞ்சங்கள் கூட இளம் பெண்ணாளே பூவாக மாறும்
இனி நான் காணும் இன்பங்கள் ஆறு போல ஓடவேண்டும்

(தனிமையிலே ஒரு ராகம்...)

என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே
என் உள்ள பொன்வாசல் தேடி
இசை காற்றாக என்னோடு கூடி
புது ஊற்றாக இன்பங்கள் ஊர வேண்டும் சேரவேண்டும்

(தனிமையிலே ஒரு ராகம்...)

ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே
எண்ணாத இன்பங்கள் யாவும் இனி என்னாலும் உன்னோடு வாழும்
பனி நீராட்டும் இந்நேரம் பாடவேண்டும் கூட வேண்டும்

(தனிமையிலே ஒரு ராகம்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

(தாமதத்திற்கு வருந்துகின்றேன்.... :( )

காலங்களில் அவள் வசந்தம்...

படம்: பாவ மன்னிப்பு.
உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: P.B. ஸ்ரீனிவாஸ்.



காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்

(காலங்களில் அவள் வசந்தம்...)

பால் போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனி போல் அணைப்பதில் கன்னி
கண் போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞனாக்கினாள் என்னை

(காலங்களில் அவள் வசந்தம்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

கொடியசைந்ததும் காற்று வந்ததா...

படம்: பார்த்தால் பசி தீரும்.
உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம். செளந்தர்ராஜன், பி.சுசீலா.



கொடியசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா

(கொடியசைந்ததும்...)

பாடல் வந்ததும் தாளம் வந்ததா
தாளம் வந்ததும் பாடல் வந்ததா
பாவம் வந்தது ராகம் வந்ததா
ராகம் வந்ததும் பாவம் வந்ததா
கண் திறந்ததும் காட்சி வந்ததா
காட்சி வந்ததும் கண் திறந்ததா
பருவம் வந்ததும் ஆசை வந்ததா
ஆசை வந்ததும் பருவம் வந்ததா

(கொடியசைந்ததும்...)

வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா
பெண்மை என்பதால் நாணம் வந்ததா
நாணம் வந்ததால் பெண்மை ஆனதா
ஓடிவந்ததும் தேடி வந்ததௌம்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா பாசம் என்பதா
கருணை என்பதா உரிமை என்பதா

(கொடியசைந்ததும்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

இதய வீணை தூங்கும் போது...

படம்: இருவர் உள்ளம்.
உயிர்: K.V.மகாதேவன்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: பி.சுசீலா.



இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா
விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா
வீட்டு குயிலை கூண்டில் வைத்தால் பாட்டு பாடுமா பாட்டு பாடுமா

(இதய வீணை தூங்கும் போது...)

மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே அடிமை செய்தானே

உருகிவிட்ட மெழுகினிலே ஒளி ஏது
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது
பழுது பட்ட கோவிலிலே தெய்வம் ஏது
பனி படர்ந்த பாதையிலே பயணம் ஏது
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Thursday, September 13, 2007

சொன்னது நீ தானா...

படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்.
உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: பி.சுசீலா.



சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே
சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என் உயிரே
ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே

என்னொரு கைகளிலே யார் யார் யார் நானா
எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே

மங்கள மாலை குங்குமம யாவும் தந்ததெல்லாம் நீ தானே
மணமகளை திருமகளாய் நினைத்ததெல்லாம் நீ தானே
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீ தானே
இறுதி வரை துணை இருப்பேன் என்றதும் நீ தானே
இன்று சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறை தான் வளரும் உறவல்லவா
சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல...

படம்: இதயகமலம்.
உயிர்: K.V.மகாதேவன்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: பி.சுசீலா.



உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத எண்ணும் எண்ணல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாம்ல் நானும் நானல்ல

(உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல...)

இங்கு நீ ஒரு பாதி நா ஒரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல...)

ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை
ஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை
நீ எந்தன் கோவில் நான் எங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

ஆட்டுவித்தால் யாரொருவர்...

படம்: அவன் தான் மனிதன்.
உயிர்: விஸ்வநாதன்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன்.



ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே

(ஆட்டுவித்தால் யாரொருவர்...)

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்ப்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன்

(ஆட்டுவித்தால் யாரொருவர்...)

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விளகும் கண்ணா
உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விளகும் கண்ணா

(ஆட்டுவித்தால் யாரொருவர்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Wednesday, September 12, 2007

தூங்காத கண்ணென்று ஒன்று...

படம்: குங்குமம்.
உயிர்: K.V.மகாதேவன்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன், பி. சுசீலா.



தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னை கண்டு

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவை என்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

யாரென்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டு தடுத்தாலும் நில்லாது
தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி
நாம் காணும் சுகமென்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

வெகுதூரம் நீ சென்று நின்றாலும்
உன் விழி மட்டும் தனியாக வந்தாலும்
வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

பாலிருக்கும் பழமிருக்கும்...

படம்: பாவ மன்னிப்பு.
உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: பி. சுசீலா.



பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது
நாலு வகை குணமிருக்கும் ஆசை விடாது
நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது

(பாலிருக்கும் பழமிருக்கும்...)

கட்டவிழ்ந்த கண் இரண்டும் உங்களை தேடும்
பாதி கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
பட்டு நிலா வான் வெளியில் காவியம் பாடும்
கொண்ட பள்ளியறை பெண்மனது போர்களம் ஆகும்

(பாலிருக்கும் பழமிருக்கும்...)

காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே
தெய்வமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
அது வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே

(பாலிருக்கும் பழமிருக்கும்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

உள்ளம் என்பது ஆமை...

படம்: பார்த்தால் பசி தீரும்.
உயிர்: ஏம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன்.



உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக்கிடப்பது மீதி

(உள்ளம் என்பது ஆமை...)

தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சில என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை

(உள்ளம் என்பது ஆமை...)

தண்ணீர் தனல் போல் எரியும்
செந்தனலும் நீர் போல் குளிரும்
நண்பனும் ப்கை போல் தெரி்யும்
அடு நாட்பட நாட்பட புரியும்

(உள்ளம் என்பது ஆமை..)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Tuesday, September 11, 2007

நான் பேச நினைப்பதெல்லாம்...

படம்: பாலும் பழமும்.
உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன், பி. சுசீலா.



நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண் வேண்டும் நீ காண் வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நான் ஆக வேண்டும் நான் ஆக வேண்டும்

பாலோடும் பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பாரத்து பசியார வேண்டும் பசியார வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நான் ஆக வேண்டும்
மடிமீதுவிளையாடும் சேயாக வேண்டும் நீ ஆக வேண்டும்

சொல்லென்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை
பொருள் என்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்தபின்னே உயிர் சேர்ந்தபின்னே
உலகங்கள் நமை அன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை

(நான் பேச நினைப்பதெல்லாம்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

ஞாயிறு என்பது கண்ணாக...

படம்: காக்கும் கரங்கள்.
உயிர்: K.V.மகாதேவன்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன், பி. சுசீலா.



ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக

நேற்றைய பொழுது கண்ணோடு
இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு

ஊருக்கு துணையாய் நான் இருக்க
எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற
மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்

(ஞாயிறு என்பது கண்ணாக...)

முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்
உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்
பேசிய படியே கொடுக்க வந்தேன்

(ஞாயிறு என்பது கண்ணாக...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

இரண்டு மனம் வேண்டும்...

படம்: வசந்த மாளிகை.
உயிர்: K.V.மகாதேவன்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன்.



குடிப்பதற்க்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்துவிடலாம்
அவளை மறப்பதற்க்கு ஒரு மனம் இருந்தால்
குடித்து விடலாம்
ஆனால் இருப்பதோ ஒரு மனது நான் என்ன செய்வேன் என்ன செய்வேன்

இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று

(இரண்டு மனம் வேண்டும்...)

சிறிய காயம் பெரிய துன்பம்
ஆரும் முன்னே அடுத்த காயம்
உடலில் என்றால் மருந்து போது
உள்ளம் பாவம் என்ன செய்யும்?

(இரண்டு மனம் வேண்டும்...)

இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்று போதாதே

(இரண்டு மனம் வேண்டும்...)

கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளை தண்டிக்க என்ன வழி?

(இரண்டு மனம் வேண்டும்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Monday, September 10, 2007

மலர்ந்த்தும் மலராத...

படம்: பாசமலர்.
உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன், பி. சுசீலா.



மலர்ந்த்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

(மலர்ந்த்தும் மலராத...)

யானை படை கொண்டு சேனை பல வென்று ஆளப்பிறந்தாயடா
புவி ஆளப்பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழ பிறந்தாயடா
வாழ பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழ பிறந்தாயடா

தங்க கடியாரம் வைரமணியாரம் தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்
உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலன் இடை வந்து பிரித்த கதை சொல்லவா
பிரித்த கதை சொல்லவா
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா

அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ அன்பே ஆரிராராரிரோ

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

நினைப்பதெல்லாம் நடந்து...

படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்.
உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: P.B.ஸ்ரீனிவாஸ்.



நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினே

(நினைப்பதெல்லாம் நடந்து...)

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவது தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

(நினைப்பதெல்லாம் நடந்து...)

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும்
மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்

(நினைப்பதெல்லாம் நடந்து...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

மாலைப்பொழுதின் மயக்கத்திலே...

படம்: பாக்யலஷ்மி.
உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: பி. சுசீலா.



மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி
காரணம் ஏன் தோழி
மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பதும் ஏன் தோழி காண்பதும் ஏன் தோழி

(மாலைப்பொழுதின் மயக்கத்திலே...)

மணம் முடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவுகண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மலையிட்டார் தோழி
வழிமறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்துவிட்டார் தோழி
பறந்துவிட்டார் தோழி

(மாலைப்பொழுதின் மயக்கத்திலே...)

கனவில் வந்தவர் யாரெனக்கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி
இளமை எல்லாம் வெறும் கனவு மையம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாது முடிவும் தெறியாது மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம்


(மாலைப்பொழுதின் மயக்கத்திலே...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Friday, September 7, 2007

அதிகாலை நேரமே...

சகோதரி சசிகலா அவர்களுக்காக.....

படம்: மீண்டும் ஒரு காதல் கதை.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி



அதிகாலை நேரமே, புதிதான ராகமே
எங்கெங்கிலும் ஆலாபனை
கூடாத நெஞசம் இரண்டும் கூடுதே பாடுதே

(அதிகாலை நேரமே...)

காற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது
காவேரி மின் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது
காவேரி மின் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது
புது சங்கமம் சுகமெங்கிலும்
ஒன்றை ஒன்று எந்நாளும் சேர்வதே ஆனந்தம்

(அதிகாலை நேரமே...)

உன்னோடு நானும், என்னோடு நீயும் உறவாடலாம்
நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற
நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற
தோளோடுதான் தோள் சேரவே
தூங்காமல் காணும் இன்பம் வாவெனும் நேரமே..

(அதிகாலை நேரமே...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

இளைய நிலா பொழிகிறதே...

படம்: பயணங்கள் முடிவதில்லை.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.



இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

(இளைய நிலா பொழிகிறதே...)

வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்
வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்
வான வீதியில் மேக ஊர்வலம் காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

(இளைய நிலா பொழிகிறதே...)

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
நீல வானிலே வெள்ளி ஓடைகள் போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

(இளைய நிலா பொழிகிறதே...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

கண்ணுக்குள் நூறு நிலவா...

படம்: வேதம் புதிது.
உயிர்: தேவேந்திரன்.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா.



கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தாண் வார்தை வருமா?
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா?

(கண்ணுக்குள் நூறு நிலவா...)

தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்ற்ம் சொல்லுமா
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா?
வானுக்கு எல்லை யார் போட்டது?
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது
சாஸ்திரம் தாண்டி தப்பி செல்வதேது?

(கண்ணுக்குள் நூறு நிலவா...)

ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்
உள்ளம் என்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்
என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது
ரெண்டா? ஏது? ஒன்று பட்ட போது

(கண்ணுக்குள் நூறு நிலவா...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

காதல் கடிதம் வரைந்தேன்...

படம்: சேரன் பாண்டியன்.
உயிர்: எஸ்.ஏ. ராஜ்குமார்.
குரல்: மனோ, ஸ்வர்னலதா.



காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா?
உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே
உங்கள் கடிதம் வந்ததால் இன்பம் எங்கும் பொங்குதே
உண்மை ஒன்று தான் இன்ப‌ காதலில் என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே?

உயிரின் உருவம் தெரியாதிருந்தேன்
உனையே உயிராய் அறிந்தே தொடர்ந்தேன்
வானும் நிலவும் போலவே
மலரும் மணமும் போலவே
கடலும் அலையை போலவே என்றும் வாழவேண்டுமே
உண்மை ஒன்று தான் இன்ப‌ காதலில் என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்

(காதல் கடிதம் வரைந்தேன்...)

பயிலும் பொழுது எழுதும் எழுத்து
உனது பெயர் தான் அதிகம் எனக்கு
வானம் கையில் எட்டினால்
அங்கும் உன்னை எழுதுவேன்
நிலைவை கொண்டு வந்துதான் பெயரில் வர்ணம் தீட்டுவேன்
உண்மை ஒன்று தான் இன்ப‌ காதலில் என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்

(காதல் கடிதம் வரைந்தேன்...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Thursday, September 6, 2007

செந்தாழம் பூவில்...

படம்: முள்ளும் மலரும்.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.





செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து வளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

(செந்தாழம் பூவில்...)

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் குள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

(செந்தாழம் பூவில்...)


இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளெ வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

(செந்தாழம் பூவில்...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

எனக்குப் பிடித்த பாடல்...

படம்: ஜூலி கணபதி.
உயிர்: இளையராஜா.
குரல்: விஜய் யேசுதாஸ்.




எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?

(எனக்குப் பிடித்த பாடல்...)

பித்துப் பிடித்ததைப் போல அடி பேச்சு குழறுதே
வண்டு குடைவதைப் போலே விழி மனசைக் குடையுதே
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்.

(எனக்குப் பிடித்த பாடல்...)

வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்

(எனக்குப் பிடித்த பாடல்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

கண்ணே கலைமானே...

படம்: மூன்றாம் பிறை.
உயிர்: இளையராஜா.
உடல்: கண்ணதாசன்.
குரல்: கே.ஜே. யேசுதாஸ்.




கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ

(கண்ணே கலைமானே...)

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

(கண்ணே கலைமானே...)

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி

(கண்ணே கலைமானே...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

ஈரமான ரோஜாவே...

படம்: இளமைக்காலங்கள்.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே. யேசுதாஸ்.




ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணீல் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

(ஈரமான ரோஜாவே...)

என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகம்
உன் வாசலில் என்னைக் கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு பொன்னாரமே...
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து

(ஈரமான ரோஜாவே...)

நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
என் நெஞ்சிலே ஒரு ரத்த‌ம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை என் காதலி...
உன் போல என்னாசை தாங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

(ஈரமான ரோஜாவே...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Wednesday, September 5, 2007

ஏதோ மோகம் ஏதோ தாகம்...

படம்: கோழி கூவுது.
உயிர்: இளையராஜா.
குரல்: கிருஷ்ணச்சந்தர், ஜானகி.



ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வனக்கிளியே...

(ஏதோ மோகம் ஏதோ தாகம்...)


தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட‌ நேரமாச்சு
சூடு கண்ட ஈர மூச்சு தோளச்சுத்து காயமாச்சு
பார்வையாலே நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காம தேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே

(ஏதோ மோகம் ஏதோ தாகம்...)

பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
தொட்ட பாகம் தொட்டு பாத்து சாய்வதென்ன கண்கள் பூத்து
அக்கம் பக்கம் சுத்தி பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து
விடியச்சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது

(ஏதோ மோகம் ஏதோ தாகம்...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

நினைவோ ஒரு பறவை...

படம்: சிகப்பு ரோஜாக்கள்.
உயிர்: இளையராஜா.
குரல்: கமல்ஹாசன், ஜானகி.



நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

(நினைவோ ஒரு பறவை...)

ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன்
அதுவல்லவோ பருகாத தேன் அதி இன்னும் நீ பருகாததேன்
அதற்காகத்தான் அலைபாய்கிறேன்
தந்தேன் தரவந்தேன்

(நினைவோ ஒரு பறவை...)

பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வை தான் என் போர்வையோ
அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் அதற்காகத்தான் மடிசாய்கிறேன்
மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
நீ தான் இனி நான் தான்

(நினைவோ ஒரு பறவை...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

நான் என்பது நீயல்லவோ...

படம்: சூரசம்ஹாரம்.
உயிர்: இளையராஜா.
குரல்: அருண்மொழி, சித்ரா.




நான் என்பது நீயல்லவோ தேவதேவி
தேவலோகம் வேறு ஏது
தேவி இங்கு உள்ள போது வேதம் ஓது
நான் என்பது நீயல்லவோ தேவதேவா
தேவலோகம் வேறு ஏது
தேவன் இங்கு உள்ள போது வேதம் ஓது

(நான் என்பது நீயல்லவோ...)

பாவை உந்தன் கூந்தல் இங்கு போதை வந்து ஏற்று போது
பார்த்து பார்த்து ஏங்கும் நெஞ்சில் வந்திடாது மாற்றம் ஏது
பார்வை செய்த சோதனை நாளும் இன்ப வேதனை
காதல் கொண்ட காமனை கண்டு கொண்டு நீ அணை
கூடினேன் பண்பாடினேன் என் கோலம் வேறு ஆனேன்
தாவினேன் தல்லாடினேன் உன் தாகம் தீர்க்கலானேன்
பாலும் தெளிதேனும் பரிமாறும் நேரம் வந்ததே

(நான் என்பது நீயல்லவோ...)

ஆசைக்கொண்ட காதல் கண்கள் காணவந்த பாடல் என்ன‌‌
ஆடுகின்ற போது நெஞ்சில் கூடுகின்ற கூடல் என்ன‌
நாளும் உந்தன் தோளிலே வாழுகின்ற நாள் இது
தோளில் இந்த நாளிலே ஆடுகின்ற பூவிது
அன்னமே என் ஆசையோ உன் ஆதி அந்தம் காண‌
கண்ணிலே உண்டானதே என் காதல் தேவி நாண‌
போதும் இது போது இளம் பூவை மேனி தாங்குமா

(நான் என்பது நீயல்லவோ...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

ராத்திரியில் பூத்திருக்கும்...

படம்: தங்கமகன்.
உயிர்: இளையராஜா.
உடல்: வாலி.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.




ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ
சேலைச் சோலையில் பருவசுகம் தேடும் மாலையில்
பகலும் உறங்கிடும்

(ராத்திரியில் பூத்திருக்கும்...)

வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்
ஜீவந‌தி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபவம்

(ராத்திரியில் பூத்திருக்கும்...)

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற
வாழையிலை நீர்தெளித்து போடடி என் கண்ணே
நாதசுரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்

(ராத்திரியில் பூத்திருக்கும்...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Tuesday, September 4, 2007

அழகான புள்ளி மானே...

படம்: மேகம் கருத்திருக்கு்.
உயிர்: மனோஜ் கியான் .
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.





அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே
பொண்ணுக்கு தாலி எதுக்கு
மூணு முடிச்சி வெகுமானம் அருமுடிச்சி அவமானம்

(அழகான புள்ளி மானே...)

அந்தப்புறத்த காவல் காக்க நானும் வந்தேங்க‌
என் அண்ணா பெயர காவல் காக்க யாரும் இல்லீங்க‌
வழக்குக்கு நானும் போக மாட்டேன் மானே
வக்கீலுக்கு ஃபீசு என்ன மானம் தானே?

(அழகான புள்ளி மானே...)

வழைமரத்தில் ஊஞ்சல் கட்ட வசதியிருக்காது
நீ தோலைப்பாத்து மாடு புடிச்சா தொழிலுக்காகாது
புழுவுக்கு ஆசப்பட்டு போகும் மீனே
தூண்டியில மாட்டிக்கிட்டா சோகம் தானே

(அழகான புள்ளி மானே...)

மனசு மட்டும் வெள்ளை தானே மயக்கம் தீராதா?
நான் கண்ணீராலே கழுவிப்பாத்தா கருப்பும் மாறாதா?
நெஞ்சுக்குள்ள முள்ளு தச்சு வாடும் போது
நாக்குக்குள்ள புண்ணு வந்தா வார்த்தை ஏது?

(அழகான புள்ளி மானே...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

அகரம் இப்போ சிகரம் ஆச்சு...

படம்: சிகரம்.
உயிர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.



அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப்பாடும் புல்லாங்குழலாச்சு
சங்கீதமே சன்னிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி

(அகரம் இப்போ சிகரம் ஆச்சு...)

கார்காலம் வந்தாலென்ன கடும் கோடை வந்தாலென்ன
மழை வெல்லம் போகும் கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனாலென்ன கோலங்கள் போனாலென்ன
பொய்யன்பு போகும் மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்லை
வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே நம்பிக்கை உங்கள் கையிலே

(அகரம் இப்போ சிகரம் ஆச்சு...)

தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆரும்
தலை சாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவாயில்லை
நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது

(அகரம் இப்போ சிகரம் ஆச்சு...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

என் இனிய பொன் நிலாவே...

படம்: மூடுபனி.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.




என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் ....
தொடருதே தினம் தினம் ....

பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இந்நேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ வ‌ண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னோரமே
வெண் நீல‌ வானில் அதில் என்னென்ன மேகம்
ஊர்கோளம் போகும் அதில் உண்டாடும் தாகம்
புரியாதோ என் எண்ணமே
அன்பே.....

(என் இனிய பொன் நிலாவே...)

பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே
தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்
கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்
இது தானே என் ஆசைகள்
அன்பே....

(என் இனிய பொன் நிலாவே...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

உறவுகள் தொடர்கதை...

படம்: அவள் அப்படித்தான்.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.



உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே.

உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்
எதர்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்

(உறவுகள் தொடர்கதை...)

வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுகராகமே ஆரம்பம் நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது

(உறவுகள் தொடர்கதை...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Monday, September 3, 2007

ஓம் நமஹ...

படம்: இதயத்தை திருடாதே.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ் ஜானகி,மனோ.



ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்
ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உதவிக்கு ஓம்

வான் வழங்கும் அமுத கலசம் வாய் வழியே ததும்பி ததும்பி வழியிதோ ஓ
தேன் பொங்கும் தெய்வ வடிவம் தோள் தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ

மூங்கிலில் காற்று நுழைந்து மோகனம் பாடுதா
நால்வகை நாணம் மறந்து நாடகம் ஆடுதா
ஆயிரம் சூரியன் நாடியில் ஏறுதா
ஆதியும் அந்தமும் வேர்வைகள் ஊறுதா
நூலாடை விலகி விலகி நீரோடை பெருகி வழியும் வேளை
முத்தங்கள் வைத்ததும் மூன்று உலகை மறந்த நெஞ்சுக்கு ஓம்

(ஓம் நமஹ...)

செவ்விதழ் சேரும் போது ஜீவன்கள் சிலிர்த்தது
ஒவ்வொரு ஆசையாக உள்ளத்தில் துளிர்த்தது
மெல்லிய மேனியும் சில்லென ஆனது
வெட்கமும் சீக்கிரம் விடை பெற்று போனது
ஏடென்று என்று இடையும் இருக்க
நூல் ஒன்று இதயம் எழுதாதோ
இளமையின் இலக்கணம் எடுத்து சொல்லிய இளைய கன்னிக்கு ஓ

(ஓம் நமஹ...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

ஓ பாபா லாலி...

படம்: இதயத்தை திருடாதே.
உயிர்: இளையராஜா.
குரல்: மனோ.



ஓ பாபா லாலி கண்மணி லாலி பொன்மணி லாலி
பாடினேன் கேளடி

(ஓ பாபா லாலி...)

நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
ஏன் செவ்விழி கலங்குது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
தலை சாய்த்திட மடி பாய்மேல் திருமேனிக்கு சுகமோ
எந்த நாளிலும் வாடாத இளம் தாமரை முகமோ
இதை காப்பது என்றும் பார்ப்பது இந்த தாய் மனமே

(ஓ பாபா லாலி...)

ஓ மேகமே ஓரமாய் நீ ஒதுங்கிடு
இரைச்சலோ இடிகளோ வேண்டுமோ
ஓ குயிலே பாடிவா என் பாடலை
நல்லிசை இதயத்தின் நாதமோ
எழும் சந்தமும் இனிதாக அதன் ஓசைகள் சுகமோ
இந்த நாளொரு அலை பாய வரும் ஆசைகள் கனவோ
எந்த ஆசையும் நிறைவேறிட நல்ல நாள் வருமே

(ஓ பாபா லாலி...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.