Wednesday, October 31, 2007

சுந்தரி கண்ணால் ஒரு சேதி...

படம்: தளபதி.
உயிர்: இளையராஜா.
உடல்: வாலி.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல சேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக


நானுனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே


(சுந்தரி கண்ணால் ஒரு சேதி...)

வாய்மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா
பாய்விரித்துப் பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா?


வாள் பிடித்து நின்றால் கூட
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட
ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்


தேனிலவுதான் வாட ஏனிந்த சோதனை
வானிலவை நீ கேளு கூறுமென் வேதனை

எனைத்தான் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ


(சுந்தரி கண்ணால் ஒரு சேதி...)

சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நானுன் மார்பில் தூங்கினால்


மாதங்களும் வாரம் ஆகும்
நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும்
பாதை மாறி ஓடினால்


கோடி சுகம் வாராதோ
நீயெனைத் தேடினால்

காயங்களும் ஆறாதோ
நீ எதிர் தோன்றினால்


உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அந்நாள் வரக் கூடும்


(சுந்தரி கண்ணால் ஒரு சேதி...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

காதலின் தீபமொன்று...

படம்: தம்பிக்கு எந்த ஊரு.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கமென்ன? காதல் வாழ்க
காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்

நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை ஹா..
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆஆஆஆஆ
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவு தான் ராகமே

எண்ணம் யாவும் சொல்ல......வா
காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்

என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டுகொண்டேன்
என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டுகொண்டேன்
பொன்னிலே பூவையள்ளும் ஆஆஆஆஆஆஆ
பொன்னிலே பூவையள்ளும்
புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்து
கவிதையைப் பாடுதே

அன்பே இன்பம் சொல்ல......வா

(காதலின் தீபமொன்று...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Tuesday, October 30, 2007

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ...

படம்: இதய கோயில்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ
மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ
மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ

ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோ?


(யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ...)

ராகங்கள் நூறு அவள் கொடுத்தாள்
கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள்

ஜீவன் அங்கே என்னைத் தேடும்
பாடல் இங்கே காற்றில் ஓடும்


காணாமல் கண்கள் நோகின்றதோ
காதல் ஜோடி ஒன்று வாடும் நேரம் இன்று

ஓர் ஏழை வெண்புறா மேடையில்
என் காதல் பெண்புறா வீதியில்
பூங்காற்று போராடவே
பூத்த பூவும் ஆற்றில் ஓடவே


(யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ...)

வான் மேகம் மோதும் மழைதனிலே
நான் பாடும் பாடல் நனைகிறதே

பாடல் இங்கே நனைவதனாலே
நனையும் வார்த்தை கரையுது இங்கே


ஜென்மங்கள் யாவும் நீ வாழவே
காதல் கொண்ட உள்ளம் காணும் அன்பின் இல்லம்

ஓர் காற்றின் கைகளும் தீண்டுமோ
என் காவல் எல்லையைத் தாண்டுமோ

நியாயங்கள் வாய் மூடுமோ
தெய்வமில்லை என்று போகுமோ(யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

பூந்தளிராட பொன்மலர் சூட...

படம்: பன்னீர் புஷ்பங்கள்
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.பூந்தளிராட ..... பொன்மலர் சூட ....

பூந்தளிராட பொன்மலர் சூட
சிந்தும் பனி வாடைக் காற்றைக்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள் - இனி
நாடும் சுப காலங்கள்

(பூந்தளிராட பொன்மலர் சூட...)

காதலை ஏற்றும் காலையின் காற்றும்
நீரைத் தொட்டுப் பாடும் பாட்டும் காதில் பட்டதே
வாலிப நாளில் வாசனைப் பூவின்
வாடை பட்டு வாடும் நெஞ்சின் எண்ணம் சுட்டதே

கோடிகளாசை கூடிய போது
கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதே
தேடிடுதே பெண் பாட்டின் ராகம்

(பூந்தளிராட பொன்மலர் சூட...)

பூமலர் தூவும் பூமரம் நாளும்
போதை கொண்டு பூமி தன்னை பூஜை செய்யுதே
பூவிரலாலும் பொன்னிதழாலும்
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே


பூமழை தூவும் புண்ணிய தேகம்
பொன்னை எண்ணுதே வண்ணம் நெய்யுதே
ஏங்கிடுதே என்னாசை எண்ணம்

(பூந்தளிராட பொன்மலர் சூட...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Monday, October 29, 2007

கேளடி கண்மணி...

படம்: புது புது அர்த்தங்கள்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆ...அ அ அ ஆ
நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற


(கேளடி கண்மணி...)

எந்நாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்
இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்

கானல் நீரால் தீராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி
கால் போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது


(கேளடி கண்மணி...)

நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாழும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா


ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை


(கேளடி கண்மணி...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

கல்யாண மாலை கொண்டாடும்...

படம்: புது புது அர்த்தங்கள்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்

(கல்யாண மாலை கொண்டாடும்...)

ஸ்ருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

(கல்யாண மாலை கொண்டாடும்...)

வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது

மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது


அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே


நல்ல மனையாளின் நேசமொரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே

(கல்யாண மாலை கொண்டாடும்...)

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னைச் சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா


நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கு
சிரிக்காத நாளில்லையே


துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே

என் சோகம் என்னோடு தான்...

(கல்யாண மாலை கொண்டாடும்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Friday, October 26, 2007

கீரவானி இரவிலே கனவிலே...

படம்: பாடும் பறவைகள்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.ஸா நிஸரீ ஸா நீ
ஆ ஹா ஹா ஆ
ஸா நிஸமகாம ரீ
அ அ அ அ அ அ அ அ அ
பதஸா நிஸரீ ஸநீ
ஆ ஹா ஹா ஆ
ஸா நிஸமகாம ரீ
அ அ அ அ அ அ அ அ அ
பத ஸஸஸநி ரிரிரிஸ கககரி மமமக பா
ஸா நீ த ப ம க ரி ஸ நி

கீரவானி
இரவிலே கனவிலே பாடவா நீ
இதயமே உருகுதே

அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வா நீ

(கீரவானி இரவிலே கனவிலே...)

கரிஸ பமக பாநி ஸரிகரிகஸ நீ பா

நீ பார்த்ததால் தானடி
சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி
பூப்பூத்தது பூங்கொடி

தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய்
இவள் மடி மீதிலே ஒரு இடம் கேட்கிறாய்
ஒருவாய் பெறுவாய் மெதுவாய்

தலைவனை நினைந்ததும் தலையணை நனைந்ததேன்
அதற்கொரு விடை தருவாய்

(கீரவானி இரவிலே கனவிலே...)

புலி வேட்டைக்கு வந்தவன்
குயில் வேட்டைதான் ஆடினேன்
புயல் போலவே வந்தவன்
பூந்தென்றலாய் மாறினேன்

இந்த வனமெங்கிலும் ஒரு சுரம் தேடினேன்
இங்கு உனைப் பார்த்ததும் அதை தினம் பாடினேன்
மலரில் மலராய் மலர்ந்தேன்
பறவைகள் இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன்

(கீரவானி இரவிலே கனவிலே ...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்...

படம்: அடுத்த வாரிசு.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.பேசக் கூடாது
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை வேகம் இல்லை
லீலைகள் காண்போமே

ஆசை கூடாது மணமாலை தந்து
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே
ஆசை கூடாது

பார்க்கும் பார்வை நீ
என் வாழ்வும் நீ
என் கவிதை நீ
பாடும் ராகம் நீ
என் நாதம் நீ
என் உயிரும் நீ

காலம் யாவும்
நான் உன் சொந்தம்
காக்கும் தெய்வம் நீ
பாலில் ஆடும்
மேனி எங்கும்
கொஞ்சும் செல்வம் நீ

இழையோடு கனியாட
தடை போட்டால் நியாயமா

உன்னாலே பசி தூக்கம் இல்லை
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனிமேல் ஏனிந்த எல்லை

ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே

(பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்...)

ரராரரா லலாலலா ரராரரா லாலாலலா

காலைப் பனியும் நீ
கண்மணியும் நீ
என் கனவும் நீ
மாலை மயக்கம் நீ
பொன் மலரும் நீ
என் நினைவும் நீ

ஊஞ்சலாடும் பருவம் உண்டு
உரிமை தரவேண்டும்
நூலில் ஆடும் இடையும் உண்டு
நாளும் வரவேண்டும்

பலகாலம் உனக்காக
மனம் ஏங்கி வாடுதே
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மணிமாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்

ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே

(பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Thursday, October 25, 2007

நிலாவே வா செல்லாதே வா...

படம்: மெளனராகம்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேன்

நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்

காவேரியா கானல் நீரா பெண்மை எது உண்மை
முள்வேலியா முல்லைப் பூவா சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை

நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்

பூஞ்சோலையில் வாடைக்காற்றும் ஆட சந்தம் பாட
கூடாதென கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரேயொரு வார்த்தை சொன்னாலென்ன தேனே
ஒரேயொரு பார்வை தந்தாலென்ன மானே
ஆகாயம் காணாத மேகம் ஏது கண்ணே

(நிலாவே வா செல்லாதே வா...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

வா வெண்ணிலா...

படம்: மெல்லத்திறந்தது கதவு.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம். ஜானகி.வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

லா லாலா லாலலா லா லாலா லாலலா
லாலாலலா லாலாலலா

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்

ஒரு முறையேனும் ஹா ஹா
திருமுகம் காணும் ஹெ ஹெ
வரம் தரம் வேண்டும் ஹோ ஹோ
எனக்கது போதும் ஹெ

எனைச்சேர ஆஆஆஆஆஆஆஆஆஆ
எனைச்சேர எதிர்பார்த்தேன்
முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்

(வா வெண்ணிலா...)

லலலலாலலா லலலலாலலா
லலலலலலலலலலலலலலலல லலலலா லலலலா
லால லால லால லா

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போதும்
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்

இடையினிலாடும் ஹா ஹா
உடையென நானும் ஹெ ஹெ
இணை பிரியாமல் ஹோ ஹோ
துணை வர வேண்டும்.. ஹெ..

உனக்காக ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
உனக்காக பனிக் காற்றை
தினம் தூது போக வேண்டினேன்

(வா வெண்ணிலா...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Wednesday, October 24, 2007

சிப்பியிருக்குது முத்துமிருக்குது...

படம்: வறுமை நிறம் சிவப்பு.
உயிர்: எம்.எஸ்.விஸ்வநாதன்.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.தந்தன தத்தன தையன தத்தன தனன தத்தன தான தையன தந்தானா
ஆஹா
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி

லல்ல லலலல்ல லல்ல லலலல்ல லல்ல லலலல்ல லாலல்லல்ல லாலாலா
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி

சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி
எப்படி?

ம்?
சந்தங்கள்
நாநநா
நீயானா
ரிஸரி
சங்கீதம்
ம்ம்ம்
நானாவேன்

சந்தங்கள் நீயானா சங்கீதம் நானாவேன்

சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
தா.......
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி ஹஹா.

னனனனனா
Come on. Say it once again!
னனனனனா
ம்... சிரிக்கும் சொர்க்கம்
தரனனா தரரனானா
தங்கத்தட்டு எனக்கு மட்டும் OK?
தாரே தாரே தானா
அப்படியா?
தேவை பாவை பார்வை
தத்தனதனா
நினைக்க வைத்து
னனனன லாலாலாலா
நெஞ்சில் இன்று நெருங்கி வந்து
னனனனனனனா தானானா லாலலா லாலாலா
Beautiful!
மயக்கம் தந்தது யார்? தமிழோ? அமுதோ? கவியோ?

சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி

சந்தங்கள்
அஹாஹா
நீயானா
அஹாஹா
சங்கீதம்
அஹாஹா
நானாவேன்
அஹாஹா

இப்பப் பாக்கலாம்!

தனன தனன னானா
ம்..?
மழையும் வெயிலும் என்ன?
தன்னனன தனன னான னானா
உன்னைக் கண்டால் மலரும் முள்ளும் என்ன?

தனனனான தனனனான தான்னா
அம்மாடியோ...
தனனனான தனனனான தான்னா
ஆங். ரதியும் நாடும் அழகிலாடும் கண்கள்
சபாஷ்

கவிதை உலகம் கெஞ்சும் உன்னைக் கண்டால்
கவிஞர் இதயம் கொஞ்சும்
ஹஹ
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய
நானுரைத்தேன்
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய
நானுரைத்தேன்

சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாடிக் கலந்திருப்பது எப்போது
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாடிக் கலந்திருப்பது எப்போது

ஹாஹாஹா லலல்லா ம்ம்ம் ஆஹாஹா
லாலாலா லாலாலா லாலாலா லாலாலா

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

ஓ... பட்டர்பிளை...

படம்: மீரா.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆஷா போஸ்லே.ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை வாவா
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை

அருகில் நீ வருவாயோ
உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை

ஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை வாவா

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
எனையும்தான் உன்னைப் போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்

நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்
ஆஹா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
ஆஹா எனக்கும் கூட அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே

உனை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை
ஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே
ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே
உன்னை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர்பார்க்கும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

(ஓ... பட்டர்பிளை...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Monday, October 22, 2007

கீதம் சங்கீதம்...

படம்: கொக்கரக்கோ.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.கீதம்......
கீதம்......
சங்கீதம்...
சங்கீதம்...
நீதானே என் காதல் வேதம்
நீதானே என் காதல்...ஹஹ்ஹாஹ்ஹா

(கீதம் சங்கீதம்...)

வாசமான முல்லையோ வானவில்லின் பிள்ளையோ
பூவில் நெய்த சேலையோ நடந்து வந்த சோலையோ

உன் கண்ணில் நீலங்கள் நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்

காணாத கோலங்கள் என்றேன் ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

(கீதம் சங்கீதம்...)

நீளமான கண்களே நீண்டுவந்து தீண்டுதே
பாவை பாதம் பார்க்கவே கூந்தல் இங்கு நீண்டதே

உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம்
உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம்

நீதானே ஆனந்தத் தெப்பம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

(கீதம் சங்கீதம்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

காலை நேரப் பூங்குயில்...

படம்: அம்மன் கோயில் கிழக்காலே.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.காலை நேரப் பூங்குயில் கவிதை பாடப் போகுது
கலைந்து போகும் மேகங்கள் கவனமாகப் கேக்குது
கேட்ட பாடல் காற்றிலே கேள்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் ஸ்வரம் ஆஆஆஆஆஆஆ

(காலை நேரப் பூங்குயில்...)

மேடை போடும் பெளர்ணமி ஆடிப் பாடும் ஓர் நதி
மேடை போடும் பெளர்ணமி ஆடிப் பாடும் ஓர் நதி
வெள்ள ஒலியினில் மேகலை மெல்ல மயங்குது என் நிலை
புதிய மேகம் கவிதை பாடும் புதிய மேகம் கவிதை பாடும்
பூபாளம் பாடாமல் எந்தன் காலை தோன்றும் எந்நாளும்

(காலை நேரப் பூங்குயில்...)

இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம்
பட்டு விரித்தது புல்வெளி பட்டுத் தெறித்தது விண்ணோளி
தினமும் பாடும் எனது பாடல் காற்றோடும் ஆற்றோடும்
இன்றும் என்றும் கேட்கும் என்றென்றும்

(காலை நேரப் பூங்குயில்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Friday, October 19, 2007

கண்மணி அன்போடு காதலன்...

என் 100வது பதிவு இது. எனக்கு மிகவும் பிடித்த பாடல், படம்.

படம்: குணா.
உயிர்: இளையராஜா.
குரல்: கமல்ஹாசன், ஜானகி.கண்மணி அன்போடு காதலன் நான் நான்
எழுதும் லெட்டர் சீ மடல் இல்ல கடுதாசி வச்சுக்கலாமா
வேண்டாம் கடிதமே இருக்கட்டும் படி
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பாட்டாவே படிச்சிட்டியா? அப்போ நானும், ம்
மொதல்ல கண்மணி சொன்னேல்ல
இங்க பொன்மணி போட்டுக்க.
பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா
நான் இங்க சௌக்கியம்
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
உன்னை நெனச்சி பாக்கும் போது
கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது
ஆனா அத எழுதணும்னு உட்கார்ந்தா
இந்த எழுத்துதான் வார்த்த
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதான்
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
அதே தான் பிரமாதம் கவிதை படி
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது....ஓஹோ

(கண்மணி அன்போடு காதலன்...)

ம், எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல
எனக்கு ஒண்ணுமே ஆவறதில்லை
இதுவும் எழுதிக்கோ
நடுவுல நடுவுல மானே! தேனே! பொன் மானே!
எல்லாம் போட்டுக்க
எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா? தாங்காது
அபிராமி! அபிராமி! அபிராமி!
அதையும் எழுதணுமா?
இது காதல்!
என் காதல் என்னன்னு சொல்லாம
ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நான் அழுது, என் சோகம் உன்னை தாக்கிடுமோ
அப்படின்னு நினைககும் போது
வர்ற அழுகை கூட நின்னுடுது ஹா! ஹா!
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது
உண்டான காயம் இங்கு தன்னாலே ஆறிப்போன
மாயமென்ன பொன் மானே பொன் மானே
என்ன காயம் ஆன போதும், என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே.....
எந்தன் காதல் என்னெவென்று
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்
எண்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது
அபிராமியே! தாலாட்டும் சாமியே! நான் தானே தெரியுமா
சிவகாமியே! சிவனில் நீயும் பாதியே! அதுவும் உனக்குப் புரியுமா

சுப லாலி லாலியே லாலி லாலியே!
அபிராமி லாலியே லாலி லாலியே!


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Thursday, October 18, 2007

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா...

படம்: இளமை ஊஞ்சலாடுகிறது.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடதில்லெல்லாம் உன்னைபோல்
பாவை தெரியுதடி

என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு

உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
நெஞ்சம் துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன் தோழி
என்னை மறந்துபோவதும் நியாயமோ
இந்த காதல் ஓவியத்தின் பாதை மாறியது
காலம் செய்து விட்ட மாயமோ
ஒருமனம் உருகுது ஒரு மனம் விலகுது ..

அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு சிறுகதை
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு சிறுகதை
கண்ணன் தனிமையிலேப் பாட
ராதை தன் வழியே ஓட
இந்த பிரிவை தாங்குமோ என் மனம்
ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல்போன்றதடி
நாளும் மாறுகின்ற உன்மனம்
எனக்கின்று புரிந்தது எவனென்று தெரிந்தது...

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

காதல் ரோஜாவே! எங்கே? நீ எங்கே?...

படம்: ரோஜா.
உயிர்: ஏ.ஆர்.ரகுமான்.
உடல்: வைரமுத்து.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.காதல் ரோஜாவே! எங்கே? நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான், கண்ணீரில் நீதான்,
கண் மூடிப் பார்த்தால், நெஞ்சுக்குள் நீதான்.
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!

தென்றல் என்னைத் தீண்டினால், சேலைத் தீண்டும் ஞாபகம்.
சின்னப் பூக்கள் பார்க்கையில், தேகம் பார்த்த ஞாபகம்.
வெள்ளி ஓடைப் பேசினால், சொன்ன வார்த்தை ஞாபகம்.
மேகம் இரண்டும் சேர்கையில், மோகம் கொண்ட ஞாபகம்.
வாயில்லாமல் போனால், வார்த்தை இல்லை பெண்ணே!
நீயில்லாமல் போனால், வாழ்க்கை இல்லை கண்ணே!
முள்ளோடுதான் முத்தங்களா சொல்! சொல்!

(காதல் ரோஜாவே! எங்கே? நீ எங்கே?...)

வீசுகின்ற தென்றலே! வேலை இல்லை நின்று போ!
பேசுகின்ற வெண்ணிலா! பெண்மை இல்லை ஓய்ந்துப் போ!
பூ வளர்த்த தோட்டமே! கூந்தல் இல்லை தீர்ந்துப் போ!
பூமி பார்க்கும் வானமே! புள்ளியாகத் தேய்ந்துப் போ!
பாவை இல்லை பாவை, தேவை என்னத் தேவை?
ஜீவன் போன பின்னே, சேவை என்ன சேவை?
முள்ளோடுதான் முத்தங்களா சொல்! சொல்!

(காதல் ரோஜாவே! எங்கே? நீ எங்கே?...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Wednesday, October 17, 2007

உன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்...

படம்:அபூர்வ சகோதரர்கள்.
உயிர்: இளையராஜா.
உடல்: வாலி.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.உன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே..
என்னை நினைச்சே நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே..

அந்த வானம் அழுதா தான் இந்த பூமியே சிரிக்கும்..!
வானம் போல் - சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்..

(உன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்...)

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்?

கொட்டும் மழைக்காலம் உப்பு விற்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்.!

தப்புக் கணக்கை போட்டுத் தவித்தேன்
தங்கமே ஞானத் தங்கமே..
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ஞானத் தங்கமே..

நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு..
நான் தான்...

(உன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்...)

கண்ணிரண்டில் நான்தான் காதல் என்னும் கோட்டை
கட்டி வைத்துப் பார்த்தேன் அத்தனையும் ஓட்டை!

உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்டவிதை யாவும் நல்ல மரம் ஆகும்..

ஆடும் வரைக்கும் ஆடியிருப்போம்
தங்கமே ஞானத் தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம்
தங்கமே ஞானத் தங்கமே

நலம் புரிந்தாய் எனக்கு
நன்றி உரைப்பேன் உனக்கு..
நான் தான்...

(உன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

ராஜா என்பார் மந்திரி என்பார்...

படம்: புவனா ஒரு கேள்விக்குரி.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.


ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள - ஒரு
ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்

கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை அனுபவிக்க யோகமில்லை
பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒருவழி இல்லை

(ராஜா என்பார் மந்திரி என்பார்...)

நிலவுக்கு வானமுண்டு மலருக்கு வாசமுண்டு
கொடிக்கொரு கிளையுமுண்டு எனக்கென என்ன உண்டு
ஏன் படைத்தானோ இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை

தெய்வத்தில் உன்னைக் கண்டேன் தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்கு களங்கம் என்று உறவுக்குள் விலகி நின்றேன்
கலக்கம் ஏனோ மயக்கம் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு

ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு - ஒரு
ராஜகுமாரன் உண்டு
ஒரு உறவும் உண்டு அதில் பரிவும் உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Tuesday, October 16, 2007

கம்பன் ஏமாந்தான்...

படம்: நிழல் நிஜமாகிறது.
உயிர்: எம்.எஸ்.விஸ்வநாதன்.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே ஹஹ கம்பன் ஏமாந்தான்

கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ
அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ - அவள்
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ

(கம்பன் ஏமாந்தான்...)

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ - அந்த
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ

(கம்பன் ஏமாந்தான்...)

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே

(கம்பன் ஏமாந்தான்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

இதயமே இதயமே...

படம்: இதயம்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே

பனியாக உருகி நதியாக மாறி
அலை வீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர்க் காதல் உறவாடிக் கலந்தேன் இன்றே
இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம்
கோலம் கலைந்ததே புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்

(இதயமே இதயமே...)

என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சைத் தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்

(இதயமே இதயமே...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Monday, October 15, 2007

பூங்கொடிதான் பூத்ததம்மா...

படம்: இதயம்.
உயிர்: இளையராஜா.
உடல்: வாலி.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பார்த்தெடுக்க தாமதிக்க
வாடைக் காற்றும் பூப்பறித்து போனதம்மா

ஆசைக்குத் தாழ் போட்டு அடைத்தென்ன லாபம்
அதுதானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழைநீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம

சிலருக்குச் சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்
ஓ..ஓ..ஓ...ஓ...ஓ...ஓ...

(பூங்கொடிதான் பூத்ததம்மா...)

தாய்கூட அழுகின்ற பி்ள்ளைக்குத்தானே
பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள்
உன்வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் அங்கே
மனதுக்குள் பலகோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும்
கோழைக்குக் காதலென்ன ஊமைக்குப் பாடலென்ன
ஓ..ஓ..ஓ...ஓ...ஓ...ஓ...

(பூங்கொடிதான் பூத்ததம்மா...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

பாடிப் பறந்த கிளி...

படம்: கிழக்கு வாசல்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.பாடிப் பறந்த கிளி பாதை மறந்ததடி பூமானே
பாடிப் பறந்த கிளி பாதை மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே

(பாடிப் பறந்த கிளி...)

ஒத்தையடிப் பாதையிலே நித்தம் ஒரு கானமடி
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி
கண்ட கனவு அது தாளாதாச்சு
கண்ணு முழிச்சா அது வாழாது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டி இழுத்தா அது வாராது
வீணாசை தந்தவரு யாரு யாரு

(பாடிப் பறந்த கிளி...)

சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சுப் போனதடி
சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சுப் போனதடி

கல்லிலடிச்சா அது காயம் அது காயம்
சொல்லிலடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலாப் போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு

(பாடிப் பறந்த கிளி...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Saturday, October 13, 2007

ராசாத்தி என் உசுரு என்னுதில்லை...

படம் : திருடா திருடா.
உயிர்: ஏ.ஆர். ரகுமான்.ராசாத்தி என் உசுரு என்னுதில்லை
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
நீ போனா என் உடம்பு மண்னுக்குள்ள
ராவோடு சேதி வரும் வாடி புள்ள

காரை வீட்டு திண்ணையில கறிக்கு மஞ்சள் அறைக்கையிலே
மஞ்சளை அறைக்கு முன்னே மனசை அறைச்சவளே
கரிசைக்காட்டு ஓடையிலே கண்டாங்கி தொவைக்கையிலே
துணிய நனையவிட்டு மனச புழிஞ்சிவளே
நல்ல களத்துமேட்டில் என்னை இழுத்து முடிஞ்சிகிட்டு
போறவ போறவ தான் பொத்திகிட்டி போனவ தான்
கல்யாண சேலையில கண்ணீரை தொடச்சிகிட்டு
போறவ போறவ தான் பொஞ்சாதியா போறவ தான்
நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டு புட்டு
அரளிப் பூசூடி அழுதபடி போற புள்ள
கடலை காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல

(ராசாத்தி என் உசுரு என்னுதில்லை...)

தொட்டு தொட்டு பொட்டு வெச்ச சுட்டு விரல் காயலையே
மரிக்கொழுந்து வெச்ச கையில் வாசம் இன்னும் போகலையே
மருதையிலே வாங்கி தந்த வளவி ஒடையலையே
மல்லுவேட்டி மத்தியில மஞ்சகறை மாறலையே
அந்த கழுத்து தேமலையும் காதோர மச்சத்தையும் பாப்பதெப்போ
பாப்பதெப்போ பாப்பதெப்போ பெளர்ணமியும் வாரதெப்போ
அந்த கொலுசு மணி சிரிப்பும் கொமரி இளஞ்சிரிப்பும் கேட்பதெப்போ
கேட்பதெப்போ கேட்பதெப்போ கீரத்தண்டும் பூப்பதெப்போ
கருவேளங்காட்டுக்குள்ள கருச்சாங்குருவி ஒன்னும்
சுதி மாறி கத்து தம்மா துணையத்தான் காணோமுன்னு
கடலை காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல

(ராசாத்தி என் உசுரு என்னுதில்லை...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Friday, October 12, 2007

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு...

படம்: மண் வாசனை.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த விட்டு
பேசிப் பேசி ராசியானதே
மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி ஆளானதே
ரொம்ப நாளானதே

(பொத்தி வச்ச மல்லிகை மொட்டு...)

மாலை இளங் காத்து அல்லியிருக்கு
தாலி செய்ய நேத்து சொல்லியிருக்கு
இது சாயங்காலமா மடி சாயும் காலமா
முல்லைப் பூச்சூடு மெல்லப் பாய் போடு
அட வாடைக் காத்து சூடு ஏத்துது

(பொத்தி வச்ச மல்லிகை மொட்டு...)

ஆத்துக்குள்ள நேத்து ஒன்ன நெனச்சேன்
வெக்க நிறம் போக மஞ்சக் குளிச்சேன்
கொஞ்சம் மறைஞ்சு பாக்கவா
இல்ல முதுகு தேய்க்கவா
அது கூடாது இது தாங்காது
சின்னக் காம்புதான பூவத் தாங்குது

(பொத்தி வச்ச மல்லிகை மொட்டு...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்...

படம்: நினைவெல்லாம் நித்யா.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம். ஜானகி.ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் கண்கள்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள் ஆஹா

(ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்...)

இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
மெளனமே சம்மதம் என்று
தீண்டுதே மன்மத வண்டு
மெளனமே சம்மதம் என்று
தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு

(ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்...)

வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது உனது கிளையில் பூவானேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேரானேன்
வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது உனது கிளையில் பூவானேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேரானேன்
பூவிலே மெத்தைகள் தைத்தேன்
கண்ணுக்குள் மங்கையை வைத்தேன்
பூவிலே மெத்தைகள் தைத்தேன்
கண்ணுக்குள் மங்கையை வைத்தேன்
நீ கட்டும் சேலைக்கு நூலானேன் ஆ..ஹா

(ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Thursday, October 11, 2007

தேவதை இளம் தேவி...

படம்: ஆயிரம் நிலவே வா.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.தேவதை இளம் தேவி
உன்னைச்சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஹோஓஓஓஓ நீயில்லாமல் நானா

(தேவதை இளம் தேவி...)

ஏறிக்கறை பூவெல்லாம்
எந்தன் பெயர் சொல்லாதோ
பூவசந்தமே நீ மறந்ததே
ஆற்று மனல் மேடுங்கும்
நான் வரைந்த கோலங்கள்
தேவ முல்லையே காணவில்லையே
காதல் சோதனை இரு கண்ணில் வேதனை
ஒரு வானம் பாடி தேகம் வாடி
பாடும் சோகம் கோடி

(தேவதை இளம் தேவி...)

எந்தனது கல்லறையில் வேறு ஒருவன் தூங்குவதா
விதி என்பதா சதி என்பதா
சொந்தமுல்ல காதலியே வற்றி விட்ட காவிரியே
உந்தன் ஆவியை நீ வெறுப்பதா
இது கண்ணீர் ராத்திரி அடி கண்ணே ஆதரி
இவன் தேயும் தேதி கண்ணீர் ஜாதி
நீ தான் எந்தன் பாதி

(தேவதை இளம் தேவி...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

மாலை சூடும் வேளை...

படம்: நான் மகான் அல்ல.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
இன்ப மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கண்ணம் உண்டு

(மாலை சூடும் வேளை...)

காயும் வெயில் காலம்
பாயும் மழை நீயும்
காயும் வெயில் காலம்
பாயும் மழை நீயும்

கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே
கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே

நீ கொஞ்ச நான் கெஞ்ச
வேதங்கள் இன்பம்
நீண்ட நேரம் தோன்றுமோ

(மாலை சூடும் வேளை...)

சோலை மஞ்சள் சேலை
கூடும் அன்பின் வேளை
சோலை மஞ்சள் சேலை
கூடும் அன்பின் வேளை

மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க
மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க
அம்மம்மா அப்பப்பா என்னாகும் தேகம்
ஆடை கொண்டு மூடுமோ

(மாலை சூடும் வேளை...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Wednesday, October 10, 2007

யார் தூரிகை தந்த ஓவியம்...

நண்பர் தஞ்சாவூர்காரன் அவர்களுக்காக...

படம்: பாரு பாரு பட்டணம் பாரு.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்,உமா ரமணன்.

>யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலம் இடும் மேகங்களே

(யார் தூரிகை தந்த ஓவியம்...)

கடல் அலைகளின் தாளம் பல ஜதிகளும் தோன்றும்
நினைவினில் ஒரு ராகம் நிதம் பல வித பாவம்
ஆடும் கடல் காற்றும் அங்கு வரும் பாட்டும்
ஓராயிரம் பாவம் ஏற்றுதே நிதமும் தேடுதே ராகம் பாடுதே
மனதினிலே கனவுகளே வருகிறதே தினம் தினம்

(யார் தூரிகை தந்த ஓவியம்...)

சிறு மலர்களின் வாசம் பல கவிதைகள் பேசும்
சில மனங்களின் பாவம் பல நினைவினில் வாழும்
அலை என ஓடும் ஆசை வந்து கூடும்
உன் வானமோ பூவைச்சூடுதே
பல நூறாசைகள் உள்ளிலே ஓடுதே
இள மனதில் புது உறவு தெரிகிறதே தினம் தினம்

(யார் தூரிகை தந்த ஓவியம்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

விடிய விடிய சொல்லித்தருவேன்...

படம்: போக்கிரி ராஜா
உயிர்: எம்.எஸ்.விஸ்வநாதன்
உடல்: கண்ணதாசன்
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்

(விடிய விடிய சொல்லித்தருவேன்...)

மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சனை
மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சனை
ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன்
ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன்

சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே

(விடிய விடிய சொல்லித்தருவேன்...)

வெட்டி எடுக்காத தங்கமோ
கொட்டி கொடுக்கின்ற வைரமோ
கல்லில் வடிக்காத சிற்பமோ
கண்ணில் அடங்காதா பெண்மையோ
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே

(விடிய விடிய சொல்லித்தருவேன்...)

பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம்
மார்ப்பில் குங்குமம் காரணம் சங்கமம்
ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே

(விடிய விடிய சொல்லித்தருவேன்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Tuesday, October 9, 2007

தாழம்பூவே வாசம் வீசு...

படம்: கைகொடுக்கும் கை.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
இரவும் இல்லே பகலும் இல்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

(தாழம்பூவே வாசம் வீசு...)

நடந்தால் காஞ்ச நிலம் செழிக்கும்
சிரிச்சா கோயில் மணி அடிக்கும்
கண்ட கண்ணு படும்

பேசும் போது பார்வை பார்த்தேன்
தோளின் மீது துண்டாய் ஆனேன்

நெஞ்சத்திலே ஏஏ..ஏஏ..ஏஏ

நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி
ஆராரிரோ பாடவோ

(தாழம்பூவே வாசம் வீசு...)

இனி நான் கோடி மலர் கொடுப்பேன்
உன்னை நான் பார்க்க விழி திறப்பேன்
இது சத்தியமே

நேரம் போனால் மேகம் ஏது
நீயும் போனால் நானும் ஏது

என்னுயிரே ஏஏஏஏ..ஏஏஏஏ

என்னுயிரே நீ இருக்க
உண்மை இது போதுமா

(தாழம்பூவே வாசம் வீசு...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

சந்தனக் காற்றே...

படம்: தனிக்காட்டு ராஜா.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வாவா
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வாவா
காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஓ ஓ
நீங்காத ஆசை

(சந்தனக் காற்றே...)


நீர் வேண்டும் பூமியில் தானனன பாயும் நதியே னனனன
நீங்காமல் தோள்களில் னனனன சாயும் ரதியே லலலல
பூலோகம் தெய்வீகம்
பூலோகம் மறைய மறைய
தெய்வீகம் தெரியத் தெரிய
வைபோகம்தான்...
தன்னானன்னானன்னானன்னான

(சந்தனக் காற்றே...)

கோபாலன் சாய்வதோ னனனன கோதை மடியில் னனனன
பூபாணம் பாய்வதோ னனனன பூவை மனதில் னனனன
பூங்காற்றும் சூடேற்றும்
பூங்காற்றும் தவழத் தவழ
சூடேற்றும் தழுவத் தழுவ
ஏகாந்தம்தான்...
தன்னானன்னானன்னானன்னான

(சந்தனக் காற்றே...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Monday, October 8, 2007

மண்ணில் இந்தக் காதலன்றி...

படம்: கேளடி கண்மணி.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ
பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா?
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

(மண்ணில் இந்தக் காதலன்றி...)

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி
தந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தம்
சிந்திவரும் குங்குமமுதம் தங்கிடும் குமுதம்
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னித் துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம் தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்

(மண்ணில் இந்தக் காதலன்றி...)


முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவளமும்
கொட்டு மலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும்வில்லெனும் புருவம்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகள்
எண்ணிவிட மறந்தாள் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா?

(மண்ணில் இந்தக் காதலன்றி...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

வா வா அன்பே அன்பே...

படம்: அக்னி நட்சத்திரம்.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ், சித்ரா.

வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரைக்கூறும் பொன்மணி
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீயின்றி ஏது பூவைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோமானே
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Friday, October 5, 2007

தேன் சிந்துதே வானம்...

படம்: பொண்ணுக்குத் தங்க மனசு.
உயிர்: ஜி.கே. வெங்கடேஷ்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க

பன்னீரில் ஆடும் செவ்வாடை கால்கள்
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
கொண்டாடுதே சுகம் சுகம் பருவங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க

வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்
விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்
விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும் சொந்தங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே

கண்ணோடு கண்கள் கவிபாட வேண்டும்
கையோடு கைகள் உறவாட வேண்டும்
கன்னங்களின் இதம் பதம் காலங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.