Monday, October 22, 2007

காலை நேரப் பூங்குயில்...

படம்: அம்மன் கோயில் கிழக்காலே.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.



காலை நேரப் பூங்குயில் கவிதை பாடப் போகுது
கலைந்து போகும் மேகங்கள் கவனமாகப் கேக்குது
கேட்ட பாடல் காற்றிலே கேள்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் ஸ்வரம் ஆஆஆஆஆஆஆ

(காலை நேரப் பூங்குயில்...)

மேடை போடும் பெளர்ணமி ஆடிப் பாடும் ஓர் நதி
மேடை போடும் பெளர்ணமி ஆடிப் பாடும் ஓர் நதி
வெள்ள ஒலியினில் மேகலை மெல்ல மயங்குது என் நிலை
புதிய மேகம் கவிதை பாடும் புதிய மேகம் கவிதை பாடும்
பூபாளம் பாடாமல் எந்தன் காலை தோன்றும் எந்நாளும்

(காலை நேரப் பூங்குயில்...)

இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம்
பட்டு விரித்தது புல்வெளி பட்டுத் தெறித்தது விண்ணோளி
தினமும் பாடும் எனது பாடல் காற்றோடும் ஆற்றோடும்
இன்றும் என்றும் கேட்கும் என்றென்றும்

(காலை நேரப் பூங்குயில்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: