படம்: கிழக்கு வாசல்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
பாடிப் பறந்த கிளி பாதை மறந்ததடி பூமானே
பாடிப் பறந்த கிளி பாதை மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே
(பாடிப் பறந்த கிளி...)
ஒத்தையடிப் பாதையிலே நித்தம் ஒரு கானமடி
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி
கண்ட கனவு அது தாளாதாச்சு
கண்ணு முழிச்சா அது வாழாது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டி இழுத்தா அது வாராது
வீணாசை தந்தவரு யாரு யாரு
(பாடிப் பறந்த கிளி...)
சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சுப் போனதடி
சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சுப் போனதடி
கல்லிலடிச்சா அது காயம் அது காயம்
சொல்லிலடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலாப் போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு
(பாடிப் பறந்த கிளி...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment