Tuesday, September 11, 2007

இரண்டு மனம் வேண்டும்...

படம்: வசந்த மாளிகை.
உயிர்: K.V.மகாதேவன்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன்.



குடிப்பதற்க்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்துவிடலாம்
அவளை மறப்பதற்க்கு ஒரு மனம் இருந்தால்
குடித்து விடலாம்
ஆனால் இருப்பதோ ஒரு மனது நான் என்ன செய்வேன் என்ன செய்வேன்

இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று

(இரண்டு மனம் வேண்டும்...)

சிறிய காயம் பெரிய துன்பம்
ஆரும் முன்னே அடுத்த காயம்
உடலில் என்றால் மருந்து போது
உள்ளம் பாவம் என்ன செய்யும்?

(இரண்டு மனம் வேண்டும்...)

இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்று போதாதே

(இரண்டு மனம் வேண்டும்...)

கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளை தண்டிக்க என்ன வழி?

(இரண்டு மனம் வேண்டும்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: