உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன், பி. சுசீலா.
மலர்ந்த்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
(மலர்ந்த்தும் மலராத...)
யானை படை கொண்டு சேனை பல வென்று ஆளப்பிறந்தாயடா
புவி ஆளப்பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழ பிறந்தாயடா
வாழ பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழ பிறந்தாயடா
தங்க கடியாரம் வைரமணியாரம் தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்
உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலன் இடை வந்து பிரித்த கதை சொல்லவா
பிரித்த கதை சொல்லவா
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா
அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ அன்பே ஆரிராராரிரோ
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
2 comments:
Hei friend,
Just now got time to see ur site, guess u have dedicated to this site, but make sure u concentrate on your study or work too..
Awesome job dude.. keep it up :)
வணக்கம் கணேஷ்,
உண்மை தான் நண்பரே. எந்த ஒரு காரியத்துக்கும் அர்ப்பணிப்பு தேவை தானே? அப்போது தான் அது முழுமையடையும் என்பது என் கருத்து. வாழத்துக்கு நன்றி. கண்டிப்பாக இந்த வலைப்பூ தொடரும் இன்னும் நல்ல அழகான பாடல்களுடன்.
Post a Comment