படம்: இதயக்கோயில்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி.
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்
(இதயம் ஒரு)
ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல
எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது
(இதயம் ஒரு கோவில்...)
காமம் தேடும் உலகிலே ஜீவன் என்னும் கீதத்தால்
ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது
(இதயம் ஒரு கோவில்...)
நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாயே
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே
(இதயம் ஒரு கோவில்...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஆயிரமாயிரம் முறை கேட்ட பாடல்(கள்) தான் என்றாலும், உங்கள் சார்பில் மீண்டும் ஒருமுறை கேட்டேன். அருமை.
உண்மை தான் ஜான் ஐயா. பல பாடல்கள் அருமையாக இருந்தாலும் சில பாடல்கள் கையில் இருக்கும் நீர் போல நழுவிப்போய் விடும். அதனால் தான் இந்த வலைப்பூ. நான் ரசித்த பாடல்கள் மட்டும் இல்லாமல் மற்றவர் விருப்பங்களையும் தர முயற்ச்சித்துக் கொண்டிருக்கிறேன். வந்தமைக்கு நன்றி. தொடர்ந்து கேளுங்கள் :)
Post a Comment