Wednesday, September 5, 2007

ஏதோ மோகம் ஏதோ தாகம்...

படம்: கோழி கூவுது.
உயிர்: இளையராஜா.
குரல்: கிருஷ்ணச்சந்தர், ஜானகி.



ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வனக்கிளியே...

(ஏதோ மோகம் ஏதோ தாகம்...)


தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட‌ நேரமாச்சு
சூடு கண்ட ஈர மூச்சு தோளச்சுத்து காயமாச்சு
பார்வையாலே நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காம தேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே

(ஏதோ மோகம் ஏதோ தாகம்...)

பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
தொட்ட பாகம் தொட்டு பாத்து சாய்வதென்ன கண்கள் பூத்து
அக்கம் பக்கம் சுத்தி பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து
விடியச்சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது

(ஏதோ மோகம் ஏதோ தாகம்...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

4 comments:

Unknown said...

Please upload, Senthazham povil vanthadum thendral Song

ஸ்ரீ said...

அருமையான தேர்வு நண்பரே!. நான் தவர விட்ட பாடல். அழகான வரிகள். இன்று வெளியிட்டு விடுகிறேன். நன்றி.

K said...

Singer was Krishnachander I guess and not Surendhar

ஸ்ரீ said...

தவறை சுட்டிகாட்டியதற்க்கு நன்றி. மாற்றப்பட்டு விட்டது.