Wednesday, September 5, 2007

ராத்திரியில் பூத்திருக்கும்...

படம்: தங்கமகன்.
உயிர்: இளையராஜா.
உடல்: வாலி.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.




ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ
சேலைச் சோலையில் பருவசுகம் தேடும் மாலையில்
பகலும் உறங்கிடும்

(ராத்திரியில் பூத்திருக்கும்...)

வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்
ஜீவந‌தி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபவம்

(ராத்திரியில் பூத்திருக்கும்...)

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற
வாழையிலை நீர்தெளித்து போடடி என் கண்ணே
நாதசுரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்

(ராத்திரியில் பூத்திருக்கும்...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: