Wednesday, August 29, 2007

மெளனமே பார்வையாய்...

படம்: அன்பே சிவம்.
உயிர்: வித்யாசாகர்.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், சந்த‌ரயி.



மெளனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்
நாணமே வண்ணமாய் பூசிக்கொண்டோம்
புன்னகைப் புத்தகம் வாசிக்கின்றோம்
என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்
இரு உள்ளம் பல வண்ணங்களை அள்ளும்
சில எண்ணங்களை சொல்லும் துள்ளும் கண்ணம்மா

(மெளனமே பார்வையாய்...)

ஜனனம் தந்தாய் சலனம் தந்தாய் காதல் மொழியில்
மரணம் கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் உந்தன் பிரிவில்

(என்றும் வாழ்க வாழ்க இந்த நேரங்கள்
சுகம் சேர்க சேர்க வரும் காலங்கள்
மலர் சூழ்க சூழ்க இவன் பாதைகள்
இன்னும் வெள்க வெள்க இளம் ஆசைகள்)

ஒரு சேதி அடி நீ என்பதென் பாதி
இனி நான் என்பதுன் மீதி தேதி சொல்லம்மா

(மெளனமே பார்வையாய்...)

இலக்கணம் உடைத்ததும் கவிதை வரும்
இரவினை துடைத்ததும் கனவு வரும்
ஸ்வரங்களை திறந்ததும் இசை மலரும்
மொழிதோன்றாத காலத்தில் நுழைந்தால் என்ன?
விழிஜாடைகள் பேசியே நடந்தால் என்ன?


(என்றும் வாழ்க வாழ்க இந்த நேரங்கள்
சுகம் சேர்க சேர்க வரும் காலங்கள்
மலர் சூழ்க சூழ்க இவன் பாதைகள்
இன்னும் வெள்க வெள்க இளம் ஆசைகள்)

ஒரு மெல்லினத்தை வல்லினமும் கைசேர‌
ஒரு காப்பியத்தை தோழி உந்தன் கண்ணாலே பேசு

(மெளனமே பார்வையாய்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: