உயிர் : இளையராஜா.
உடல் : கங்கை அமரன்.
குரல் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.
உறவென்னும் புதிய வானில் பறந்ததே இதய மோகம்
ஓடும் அலை என மனம் போகும்
கனவிலும் நினைவிலும் புது சுகம்
(உறவென்னும் புதிய வானில்...)
பார்வை ஒவ்வொன்றும் கூறும் பொன் காவியம்
பாவை என்கின்ற கோலம் பெண் ஓவியம்
மாலை வரும் போதிலே நாளும் உந்தன் தோளிலே
கனவில் ஆடும் நினைவு யாவும் இனிய பாவம்
(உறவென்னும் புதிய வானில்...)
நெஞ்சில் உள்ளூர ஓடும் என் ஆசைகள்
நேரம் இல்லாமல் நாளும் உன் பூஜைகள்
எந்தன் மனம் எங்கிலும் இன்பம் அது சங்கமம்
இணைந்த கோலம் இனிய கோலம் இளமைக்காலம்
(உறவென்னும் புதிய வானில்...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.