நண்பர்களே! ஏதேனும் பாடல் சரியாக ஒலிக்காவிட்டால் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். கொஞ்சம் வேலை பலு அதனால் என் தேர்வுகளை வெளியிட முடியவில்லை. உங்கள் விருப்பங்களை சொல்லுங்கள் கண்டிப்பாக வெளியிட முயற்சிக்கிறேன் 2 வேலை நாட்களுக்குள் :)
யார் யார் சிவம் நீ நான் சிவம் வாழ்வே தவம் அன்பே சிவம் ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும் நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்) யார் யார் சிவம் நீ நான் சிவம்
யார் யார் சிவம் நீ நான் சிவம் வாழ்வே தவம் அன்பே சிவம் இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும் அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும் அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)
யார் யார் சிவம் நீ நான் சிவம் அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)
கண்மணி அன்போடு காதலன் நான் நான் எழுதும் லெட்டர் சீ மடல் இல்ல கடுதாசி வச்சுக்கலாமா வேண்டாம் கடிதமே இருக்கட்டும் படி கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே பாட்டாவே படிச்சிட்டியா? அப்போ நானும், ம் மொதல்ல கண்மணி சொன்னேல்ல இங்க பொன்மணி போட்டுக்க. பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா நான் இங்க சௌக்கியம் பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே உன்னை நெனச்சி பாக்கும் போது கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது ஆனா அத எழுதணும்னு உட்கார்ந்தா இந்த எழுத்துதான் வார்த்த உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது அதான் அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது அதே தான் பிரமாதம் கவிதை படி கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது....ஓஹோ
(கண்மணி அன்போடு காதலன்...)
ம், எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும் அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல எனக்கு ஒண்ணுமே ஆவறதில்லை இதுவும் எழுதிக்கோ நடுவுல நடுவுல மானே! தேனே! பொன் மானே! எல்லாம் போட்டுக்க எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும் உன் உடம்பு தாங்குமா? தாங்காது அபிராமி! அபிராமி! அபிராமி! அதையும் எழுதணுமா? இது காதல்! என் காதல் என்னன்னு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது ஆனா நான் அழுது, என் சோகம் உன்னை தாக்கிடுமோ அப்படின்னு நினைககும் போது வர்ற அழுகை கூட நின்னுடுது ஹா! ஹா! மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது உண்டான காயம் இங்கு தன்னாலே ஆறிப்போன மாயமென்ன பொன் மானே பொன் மானே என்ன காயம் ஆன போதும், என் மேனி தாங்கிக் கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே..... எந்தன் காதல் என்னெவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் எண்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது அபிராமியே! தாலாட்டும் சாமியே! நான் தானே தெரியுமா சிவகாமியே! சிவனில் நீயும் பாதியே! அதுவும் உனக்குப் புரியுமா
யார் தூரிகை தந்த ஓவியம் யார் சிந்தனை செய்த காவியம் புது மாலை தரும் சுகம் சுகம் கோலம் இடும் மேகங்களே
(யார் தூரிகை தந்த ஓவியம்...)
கடல் அலைகளின் தாளம் பல ஜதிகளும் தோன்றும் நினைவினில் ஒரு ராகம் நிதம் பல வித பாவம் ஆடும் கடல் காற்றும் அங்கு வரும் பாட்டும் ஓராயிரம் பாவம் ஏற்றுதே நிதமும் தேடுதே ராகம் பாடுதே மனதினிலே கனவுகளே வருகிறதே தினம் தினம்
(யார் தூரிகை தந்த ஓவியம்...)
சிறு மலர்களின் வாசம் பல கவிதைகள் பேசும் சில மனங்களின் பாவம் பல நினைவினில் வாழும் அலை என ஓடும் ஆசை வந்து கூடும் உன் வானமோ பூவைச்சூடுதே பல நூறாசைகள் உள்ளிலே ஓடுதே இள மனதில் புது உறவு தெரிகிறதே தினம் தினம்
படம் : கீதாஞ்சலி. உயிர் : இளையராஜா குரல் : இளையராஜா, உமா ரமணன்.
ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழவேண்டாம் இங்கு கண்ணீரும் விழவேண்டாம் உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
(ஒரு ஜீவன் அழைத்தது...)
முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய் முள்ளை உள்ளே வைத்தாய் என்னைக்கேளாமல் கன்னம் வைத்தாய் நெஞ்சில் கன்னம் வைத்தாய் நீ இல்லை என்றால் என் வானில் என்றும் பகல் என்ற ஒன்றே கிடையாது அன்பே நம் வாழ்வில் பிறிவென்பதில்லை ஆகாயம் ரெண்டாய் உடையாது இன்று காதல் பிறந்தநாள் என் வாழ்வில் சிறந்த நாள் மணமாலை சூடும் நாள் பார்க்கவே
(ஒரு ஜீவன் அழைத்தது...)
உன்னை நான் கண்ட நேரம் நெஞ்சில் மின்னல் உண்டானது என்னை நீ கண்ட நேரம் எந்தன் நெஞ்சம் துண்டானது காணாத அன்பை நான் இங்கு கண்டேன் காயங்கள் எல்லாம் பூவாக காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல கண்டேனே உன்னை தாயாக மழை மேகம் பொழியுமா நிழல் தந்து விலகுமா இனி மேலும் என்ன சந்தேகமா?