Sunday, December 9, 2007

யார் யார் சிவம்...

படம்: அன்பே சிவம்.
உயிர்: வித்யாசாகர்.
உடல்: வைரமுத்து.
குரல்: கமல்ஹாசன்.


யார் யார் சிவம் நீ நான் சிவம்
வாழ்வே தவம் அன்பே சிவம்
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)
யார் யார் சிவம் நீ நான் சிவம்

யார் யார் சிவம் நீ நான் சிவம்
வாழ்வே தவம் அன்பே சிவம்
இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)

யார் யார் சிவம் நீ நான் சிவம்
அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.


2 comments:

Thanjavurkaran said...

அருமையான பாடல்.
நண்பர் ரவி அவர்களே. மற்றுமொரு எஸ்.பி.பி. உமா ரமணன் பாடல் கேட்க ஆசை.
பாடல் " உதயமே உயிரே அழைத்தும் வாரததேன்" என்று ஆரம்பிக்கும். மோகன் நடித்த படம். இசை எஸ்.எ. ராஜ்குமார். படம் பெயர் நினைவில் இல்லை.

உங்களிடம் இந்த பாடல் இருந்தால் போடவும். பலர் இந்த பாடலுக்கு இசை இளையராஜா என்றே நினைத்துஇருப்பர்

ஸ்ரீ said...

கண்டிப்பாக வழங்குகிறேன் நண்பரே ஒரு சின்ன திருத்தம் நான் ஸ்ரீ.

மீண்டும் பெங்களூருக்கு மாற்றப்பட்டு விட்டேன் அதனால் இனி தினமும் பாடல்கள் தான் நம் வலைப்பூவில் :) .

இந்த வார இறுதி பயணம் அதனால் பாடல் வரிகள் புதன் கிழமை அன்று வெளியிடப்படும்