படம்: கொக்கரக்கோ.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
கீதம்......
கீதம்......
சங்கீதம்...
சங்கீதம்...
நீதானே என் காதல் வேதம்
நீதானே என் காதல்...ஹஹ்ஹாஹ்ஹா
(கீதம் சங்கீதம்...)
வாசமான முல்லையோ வானவில்லின் பிள்ளையோ
பூவில் நெய்த சேலையோ நடந்து வந்த சோலையோ
உன் கண்ணில் நீலங்கள் நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்
காணாத கோலங்கள் என்றேன் ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
(கீதம் சங்கீதம்...)
நீளமான கண்களே நீண்டுவந்து தீண்டுதே
பாவை பாதம் பார்க்கவே கூந்தல் இங்கு நீண்டதே
உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம்
உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம்
நீதானே ஆனந்தத் தெப்பம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
(கீதம் சங்கீதம்...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அருமையான பாடல்.
எழுதியது யார்? கங்கை அமரனாக இருக்கலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் சந்தம் கொஞ்சம் கூட தப்பாமல், பிற மொழி கலப்பில்லாமல், ஆனால் கொஞ்சம் கூட பொருளில்லாமல் எழுதுவதில் அவர்தான் கில்லாடி. :)) அடுத்தது வாலி. இது யார்?
வாங்க பிரசன்னா,
இருக்கலாம் பிரசன்னா அவர் கூட எழுதியிருக்கலாம் இயக்குனர் அவர் தானே இந்த படத்துக்கு. அழகான பாடல் ஆனாலும் ;)
//கொஞ்சம் கூட பொருளில்லாமல் எழுதுவதில் அவர்தான் கில்லாடி. :)) அடுத்தது வாலி //
மூனாவதா இன்னொருத்தர் இருக்கார், இனையத்துல.
-----------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.
Post a Comment