Thursday, August 23, 2007

பூங்காத்து திரும்புமா...

படம்: முதல் மரியாதை.
உயிர்: இளையராஜா.
உடல்: வைரமுத்து.
குரல்: மலேசியா வாசுதேவன், ஜானகி.



பூங்காற்று திரும்புமா?
என் பாட்ட விரும்புமா?
பாராட்ட‌ மடியில் வெச்சுத் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா?

(பூங்காற்று திரும்புமா...)

ராசாவே வருத்தமா?
ஆகாயம் சுருங்குமா?
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா?

என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல

ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாத சோகத்த சொன்னேனடி

சொக ரக சோகந்தானே

யாரது போரது?

குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

(பூங்காற்று திரும்புமா...)

உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறணும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்

மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே

எசப் பாட்டு படிச்சேன் நானே

பூங்குயில் யாரது?

கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க

அடி நீதானா அந்தக் குயில்?
யார் வீட்டு சொந்தக் குயில்?
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே

நாந்தானே அந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகம் தான் மறந்ததா?


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

1 comment:

நாமக்கல் சிபி said...

அருமையான பாட்டு. முதல்ல மனசுல சுமைய ஏத்தி விட்டுட்டு அப்புறமா தாலட்டித் தூங்க வைச்சிடும்!

அதுக்கேத்த மாதிரி சிவாஜியின் முகபாவனையும் நடிப்பும் அபாரமா இருக்கும்!